உதவின்னா எப்படி செய்யணும்னு ரஜினிய பார்த்து கத்துக்கோங்க கமல் சார்.. இத சுயநலம்னு எப்படி சொல்ல முடியும்

ஆரம்ப காலத்தில் இருந்து இப்போது வரை ரஜினி, கமல் இருவரும் நண்பர்களாக இருந்தாலும் அவர்களின் ரசிகர்களுக்குள் ஒரு போட்டி இருக்கத்தான் செய்கிறது. அதனாலேயே ரசிகர்கள் இவர்களின் செயல்பாடுகளையும் ஒப்பிட்டுப் பார்த்து வருகின்றனர். அதில் ரஜினி அளவுக்கு கமல் பிறருக்கு உதவி செய்ய மாட்டார் என்ற குற்றச்சாட்டு இப்போது வரை இருக்கிறது.

அதாவது உலக நாயகன் 60 வருடங்களுக்கும் மேலாக திரை துறையில் இருந்து வருகிறார். அதேபோன்று ரஜினியும் 45 வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் இருக்கிறார். இவர்களில் கமலின் சாதனை தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்திருக்கிறது.

ஏனென்றால் அவரின் நடிப்பு அந்த அளவிற்கு ஒரு தனித்துவத்துடன் இருக்கும். அதனாலேயே அவர் சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவிலேயே போட்டு வருகிறார். மேலும் சினிமாவின் மீது தனக்கு இருக்கும் காதலையும் அவர் பல சமயங்களில் வெளிப்படுத்தி இருக்கிறார்.

அப்படி இருந்தும் கூட சினிமாக்காரர்களுக்கு அவர் பெரிய அளவில் எந்த உதவியும் செய்வதில்லை என்ற புகார் பல வருடங்களாகவே இருந்து வருகிறது. அந்த வகையில் நடிகர் சங்கத்திற்காக கமல் இதுவரை எந்த ஒரு உதவியும் செய்தது கிடையாது. அதே போன்று கஷ்டப்படுபவர்களுக்கு பண உதவியும் செய்தது கிடையாது என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது.

ஆனால் ரஜினி, அஜித் போன்றவர்கள் சினிமாக்காரர்களுக்கு ஏகப்பட்ட உதவிகளை நேரடியாகவும், மறைமுகமாகவும் செய்து வருகின்றனர். சமீபத்தில் கூட சூப்பர் ஸ்டார் பிதாமகன் தயாரிப்பாளருக்கு செய்த உதவி மீடியாவில் வைரலானது. அது மட்டுமல்லாமல் வெளி உலகத்திற்கு தெரியாத பல நல்ல விஷயங்களையும் இவர் செய்து கொண்டு தான் இருக்கிறார். ஆனால் இதற்கும் சில விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

அதாவது தன்னுடைய சுயலாபத்திற்காக தான் ரஜினி இது போன்ற உதவிகளை செய்து வருவதாகவும் சிலர் கூறுகின்றனர். ஆனால் உண்மையில் உதவி செய்வது எப்படி என்பதை கமல், ரஜினியை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். மேலும் இது சுயநலம் என்று எப்படி சொல்ல முடியும் என அவருடைய ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.