1. Home
  2. கோலிவுட்

நடித்த 70% படங்களில் கூடவே கூட்டி வந்த கமல்.. உலகநாயகன் இன்றுவரை விட்டுக் கொடுக்காத உயிர் நண்பர்

நடித்த 70% படங்களில் கூடவே கூட்டி வந்த கமல்.. உலகநாயகன் இன்றுவரை விட்டுக் கொடுக்காத உயிர் நண்பர்
இவர் இயக்கத்தில் வெளிவந்த குணா படத்தில் தான் கமல் நடித்திருந்தார்

Actor Kamal: குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை உருவாக்கிக் கொண்டவர் உலகநாயகன். தற்பொழுது அடுத்த கட்ட படங்களில் ஆர்வம் காட்டி வரும் ஆண்டவரின் உயிர் நண்பனை பற்றிய சில தகவலை இங்கு காண்போம்.

உலக நாயகன் கமலை பொறுத்தவரை தமிழ் சினிமாவில் அவரின் அனுபவம் ஜாஸ்தி. ஆகையால் இவருடன் ட்ராவல் செய்வதற்கு என்று ஒரு தனித்தன்மை வேண்டும். மேலும் தான் நடிக்கும் படங்களின் இயக்குனராக இருப்பினும் அவர்களுக்கும் இவர் ஆலோசனை கொடுப்பாராம்.

அவ்வாறு கதை பிடிக்கவில்லை என்றால் சற்று என்று போட்டு உடைத்து விடும் தன்மை கொண்ட இவருக்கு ஒத்துபோகும் சில கேரக்டர்களை மட்டும்தான் தன் படத்தில் அடிக்கடி தலை காட்ட செய்வாராம். அவ்வாறு இன்று வரை இயக்குனர் சந்தன பாரதியை தன்னுடைய முக்கால்வாசி படங்களில் உபயோகித்து வருகிறார் கமல்.

90 காலகட்டத்தில் சிறந்த இயக்குனராக இருந்தவர் தான் சந்தன பாரதி. இவர் இயக்கத்தில் வெளிவந்த குணா படத்தில் தான் கமல் நடித்திருந்தார். இவர்கள் இருவரின் கூட்டணியில் அப்படம் மாபெரும் வெற்றியை சந்தித்தது. அதன்பின் இவர்கள் கூட்டணியில் உருவாகிய படம்தான் மகாநதி.

இப்படம் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபிஸ் வசூலை பெற்று தந்தது. மேலும் சந்தான பாரதி இவ்விரண்டு படத்திற்கும் சிறந்த இயக்குனர் விருதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து இவர்களிடையே நட்பு உருவாகி அதன் பின் கமல் தன் படங்களில் இவரையும் குணச்சித்திர நடிகராக நடிக்க வைத்துள்ளார்.

அவ்வாறு இவர்கள் கூட்டணியில் வெளிவந்த படங்கள் தான் மைக்கேல் மதன காமராஜன், பம்மல் கே சம்பந்தம், பஞ்சதந்திரம், விக்ரம் போன்றவை. மேலும் குறிப்பாக 70% படங்களில் கூடவே ட்ராவல் செய்த ஒரே நடிகர் சந்தானம் பாரதி தான். சமீபத்தில் வெளிவந்த விக்ரம் படத்திலும் ஏஜென்ட் உப்பிலியப்பன் ஆக கமலுடன் இணைந்து நடித்திருப்பார் சந்தன பாரதி. அவ்வாறு இருப்பின் கமல் இதுவரை கடந்து வந்த பாதையில் இவரை மட்டும் தான் தன் உயிர் நண்பனாக கருதி உள்ளார்.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.