1. Home
  2. கோலிவுட்

கமலின் காலில் விழப்போன ரஜினி.. 33 வருடங்களாக ரகசியத்தை சொல்லாமல் மறைத்து வரும் உலக நாயகன்

கமலின் காலில் விழப்போன ரஜினி.. 33 வருடங்களாக ரகசியத்தை சொல்லாமல் மறைத்து வரும் உலக நாயகன்
33 வருடங்களாக ரஜினி இடம் ரகசியத்தை மறைத்து வரும் கமல்ஹாசன்.

Rajini and Kamal: ரஜினி மற்றும் கமல் முன்னணி நடிகர்கள் என்பதையும் தாண்டி இவர்களுக்குள் ஆழமான நட்பு இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. இவர்களுடைய நட்பு இன்னும் வரை நீடித்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் ரஜினி சினிமா சம்பந்தப்பட்ட எந்த ஒரு சந்தேகங்களையும் கமலிடம் சொல்லி தீர்வு கண்ட பிறகு முடிவை எடுப்பார்.

அந்த அளவிற்கு நண்பர் மீது அளவு கடந்த நம்பிக்கையை வைத்திருக்கிறார். அதே மாதிரி கமலும், ரஜினியை எங்கேயுமே விட்டுக் கொடுக்காமல் தூக்கி வைத்து பேசக் கூடியவர். மேலும் தற்போது ரஜினியை பற்றி ஒரு செய்தி அண்மையில் பரவி நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். அதாவது இமயமலைக்குப் போன பின்பு யோகி ஆதித்யநாத் காலில் விழுந்ததை பலரும் கமெண்ட் செய்கிறார்கள்.

ஆனால் ரஜினி ஒரு பேட்டியில் வயதில் சிறியவராக இருந்தாலும் நல்ல விஷயம் செய்கிறார்கள் என்றால் பாராட்ட வேண்டும். அதனால் அவர்கள் காலில் விழுவது கூட தப்பில்லை என்று கூறியிருக்கிறார். அந்த வகையில் இவருடைய நண்பன் கமல்ஹாசன் காலிலும் விழுவதற்கு தயாராக போயிருக்கிறார். அதாவது 33 வருடங்களுக்கு முன் இரவு 2 மணிக்கு கமல் வீட்டிற்கு சென்று இருக்கிறார் ரஜினி.

அதன் பின் அங்க என்ன விஷயங்கள் நடந்தது என்று பல பேட்டிகளில் அவர் கூறியிருக்கிறார். அதாவது கமல் நடித்த அபூர்வ சகோதரர்கள் படத்தை ரஜினிக்கு இரவு 11 மணிக்கு சிறப்பு காட்சியாக போட்டு காட்டி இருக்கிறார்கள். இப்படத்தை பார்த்ததும் ரஜினி பூரித்து போய்விட்டார். அதனால் உடனே கமலை பாராட்டியாக வேண்டும் என்று இரவு 2 மணிக்கு நேராக காரில் சென்று கமல் வீட்டிற்கு போய் இருக்கிறார்.

அதன் பின் கமல் வீட்டின் கதவை தட்டிய ரஜினி, கமலை பார்த்து உங்க காலில் விழுந்தால் கூட தப்பில்லை என்று கூறி அபூர்வ சகோதரர் படத்தில் அப்புவாக நடித்ததை நான் பார்த்து ரொம்பவே வியந்து போய் விட்டேன். அது எப்படி உங்களால் நடிக்க முடிந்தது என்று கேட்டிருக்கிறார். ஆனால் அதற்கு சரியான பதிலை சொல்லாமல் கமல் அப்பொழுது மழுப்பிருக்கிறார்.

இன்னும் வரை இந்த ரகசியத்தை கமல் ரஜினி இடமும் மற்ற யாரிடமும் சொல்லாமல் மறைத்து வருகிறார். இப்படி ரஜினி அவருக்கு மனதிற்கு தோன்றியது என்றால் யார் எவர் என்று கூட பார்க்க மாட்டார் உடனே அவர்களை பாராட்டி விடுவார். அப்படித்தான் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது கூட. ஆனால் இதை தவறாக பலரும் புரிந்து கொண்டு கலாய்த்து வருகிறார்கள்.

Cinemapettai Team
Vijay

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.