1. Home
  2. கோலிவுட்

குள்ளன் என பாலிவுட்டில் அவமானப்படுத்தப்பட்ட கமல்.. 200 நாட்கள் ஓடி சாதித்துக் காட்டிய சம்பவம்.!

குள்ளன் என பாலிவுட்டில் அவமானப்படுத்தப்பட்ட கமல்.. 200 நாட்கள் ஓடி சாதித்துக் காட்டிய சம்பவம்.!
கமல்ஹாசன் தன் அவமானத்தை படமாக மாற்றி அந்தப் படத்தை 200 நாட்கள் ஓட வைத்து சாதனை புரிந்தார் அதிசயம்.

தென்னிந்தியாவை பொறுத்தவரை நடிகர்களுக்கு வயது, தோற்றம், அழகு, செல்வாக்கு என எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள். ஆனால் திறமை இருந்தால் போதும் அவர்களை மக்கள் தலையில் வைத்து கொண்டாடுவார்கள். ஆனால் வட இந்தியாவில் இருக்கும் திரைபிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை ஒரு நடிகர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என எழுதப்படாத விதிமுறைகளை வைத்துள்ளார்கள். அதிலும் முக்கியமாக ஒரு நடிகர் என்றால் வெள்ளையாக தான் இருக்க வேண்டும், உயரமாக இருக்கவேண்டும், செல்வாக்குடன் இருக்க வேண்டும் என்று பல நிபந்தனைகள் இன்றுவரை அங்குள்ளது. அப்படி பல இன்னல்கள் இருந்தபோதிலும் வட இந்தியாவிற்கு சென்று உலகநாயகன் கமல்ஹாசன் தனது நடிப்பு திறமையை அங்கும் நிரூபித்து பல விருதுகளையும், புகழையும் பெற்றார். ஆனால் அங்கிருந்த எழுதப்படாத விதிமுறைகள் கமல்ஹாசனை நிலைகுலைய வைத்தது எனலாம். 1982ஆம் ஆண்டு இயக்குனர் பாலச்சந்தர் இயக்கத்தில் ஏக் துஜே கே லியே என்ற இந்தி திரைப்படத்தில் அறிமுகமாகி நடித்தார் கமல்ஹாசன். அத்திரைப்படம் அவருக்கு தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வாங்கிக்கொடுத்தது. அதன்பின் சத்மா, சனம் தேரி கசம், சாகர் உள்ளிட்ட பல ஹிந்தி திரைப்படங்களில் நடித்து இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தார். அப்படி இந்தியில் தொடர் திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வந்த கமலஹாசனை அங்குள்ள ரசிகர்கள் குள்ளன் என கூறி அவரது உயரத்தை கேலி செய்து அவமானப்படுத்தினார்கள். அப்போது வடஇந்தியாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்த அமிதாப்பச்சனின் உயரம், நடிப்பு அங்கிருந்த ரசிகர்களை கவர்ந்தது. அதனால் கமல்ஹாசனை பார்த்து நீங்கள் அமிதாப்பச்சன் போல் உயரமாக இருக்க வேண்டும் இல்லை என்றால் சாதாரண மனிதனின் உயரமாக இருக்கவேண்டும் அப்படி இருந்தால் மட்டுமே பாலிவுட்டில் நீங்கள் நடிக்க முடியும் என்று கூறினார்கள். இப்படிப் பேசியது கமல்ஹாசனுக்கு மிக அவமானத்தை ஏற்படுத்தியது தனக்கு திறமை இருக்கிறது உயரம் முக்கிய இல்லை என்று நிரூபிக்க வேண்டும் என்று யோசித்து அதை ஒரு கதையாக மாற்றி படமாக எடுக்க வேண்டும் என்று நினைத்து உருவாக்கப்பட்டதுதான் அபூர்வ சகோதரர்கள். தன் அவமானத்தை படமாக மாற்றினார். சினிமாவில் திறமை தான் முக்கியம் உயரம், தோற்றம் அழகு என எதுவும் தேவையில்லை என்பதை நிரூபிக்கும் விதமாக இப்படத்தின் கதையை கமல்ஹாசன் எழுதியிருப்பார். இந்தப்படம் 200 நாட்கள் பல தியேட்டர்களில் ஓடி சாதனை படைத்தது இந்த படத்திற்காக கமலஹாசன் சிறந்த நடிகர் என்ற தமிழ்நாடு ஸ்டேட் விருது, பிலிம்வேர் விருது பல விருதுகளை வாங்கிக்கொடுத்தார். இந்திய சினிமாவை தாண்டி வெளிநாடுகளுக்கு சென்று சிறந்த இந்திய படம் என்ற பெருமையையும் வாங்கிக்கொடுத்தார் கமல்ஹாசன்.
Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.