தான் தேர்ந்தெடுத்த கேரக்டருக்கு நியாயம் சேர்க்கும் வகையில் தன்னுடைய ஒட்டு மொத்த உழைப்பையும் கொடுப்பதால் தான் கமல் உலக நாயகனாக கொண்டாடப்பட்டு வருகிறார். இவருடைய படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் கூட காலம் கடந்தும் பேசப்படுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.
அந்த வகையில் கடந்த வருடம் விக்ரம் திரைப்படத்தின் மூலம் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த கமல் தற்போது சேனாபதியாக களம் காண இருக்கிறார். 27 வருடங்களுக்கு முன்பு இந்தியன் படத்தின் மூலம் அனைவரையும் மிரள விட்ட இவர் தற்போது அடுத்த பாகத்திலும் தன்னுடைய அர்ப்பணிப்பை வேற லெவலில் கொடுத்திருக்கிறார்.
சங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படம் பல பிரச்சனைகளை சந்தித்தாலும் தற்போது விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சேனாபதி என்னும் இந்தியன் தாத்தா கதாபாத்திரத்திற்காக கமல் மிகவும் மெனக்கெட்டு வருகிறார். அதிலும் அந்த கேரக்டருக்காக மேக்கப் போடுவதற்கு மட்டுமே 4 மணி நேரம் ஆகிறதாம்.
இதுதான் இப்போது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. 68 வயதான போதும் இளம் ஹீரோக்களையே வியக்க வைக்கும் அளவுக்கு கமல் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருவது பட குழுவினரை கூட மிரள தான் விட்டிருக்கிறது. அந்த வகையில் இந்தியன் படத்தின் முதல் பாகத்தை பார்க்காத இளம் பார்வையாளர்கள் கூட இரண்டாம் பாகத்தை பார்த்து மிரண்டு போவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அந்த அளவுக்கு சேனாபதியாக கமல் தன் முழு சுயரூபத்தையும் காட்ட இருக்கிறார். ஏற்கனவே இந்த இந்தியன் தாத்தா கதாபாத்திரத்தின் மீது மிகப்பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. வயதானவராக இருந்தாலும் புத்திசாலித்தனமான அதே சமயம் அநியாயத்தை கண்டு பொங்குவது போல் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கேரக்டர் நிச்சயம் 2K கிட்சுக்கு வேற லெவல் சர்ப்ரைஸ் தான்.
இது குறித்து கமல் சமீபத்தில் பேசும் போது கூட இப்படத்தை இளைய சமுதாயத்தினரிடம் கொண்டு சேர்ப்பதற்காக பல டெக்னீசியன்கள் கடுமையாக உழைத்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார். அந்த வகையில் பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கும் இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் முற்றுப்பெற இருக்கிறது. அதை தொடர்ந்து இறுதி கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டு படத்தை விரைவில் வெளியிடுவதற்கும் தயாரிப்பு தரப்பு ஆர்வம் காட்டிக்கொண்டிருக்கிறது.