Vijay-Kamal-Atlee: பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம் என்பது போல் தற்போது சன் டிவி ஒரு பெரும் சிக்கலில் மாட்டியிருக்கிறது. அதாவது ஜவான் மேடையில் அட்லி விஜய் பற்றி பெருமையாக பேசியிருந்தார். அந்த விவகாரம் தான் இப்போது மிகப்பெரும் பிரச்சனையாக உருவெடுத்து இருக்கிறது.
எப்படி என்றால் ஜவான் இசை வெளியீட்டு விழா நிகழ்வை சன் டிவி தன்னுடைய சேனலில் ஒளிபரப்பு செய்தது. அதில் அட்லி விஜய் குறித்து பெருமையாக பேசிய அனைத்து விஷயங்களும் கட் செய்யப்பட்டிருந்தது. இதனால் அதிர்ந்து போன பலரும் சன் டிவிக்கு விஜய் மேல் அப்படி என்ன கோபம் என்று கேள்வி எழுப்பி வந்தனர்.
உடனே சன் டிவி எங்களுக்கு எடிட் செய்யப்பட்டு வந்ததை தான் நாங்கள் ஒளிபரப்பு செய்தோம் என்று விளக்கம் கொடுத்தனர். அப்புறம் வேறு எங்கு தவறு நடந்தது என்று விசாரித்து பார்த்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. அதாவது இந்த பிரச்சனைக்கு மூல காரணமே கமலின் கூட்டாளியான விஜய் டிவி மகேந்திரன் தான்.
அவர்தான் நம்பியார் போல் இப்படி ஒரு வில்லத்தனத்தை செய்திருக்கிறார். எப்படி என்றால் அட்லி மகேந்திரனுக்கு தம்பி முறை உறவினர் ஆவார். அதன் காரணமாகவே ஜவான் இசை வெளியீட்டு நிகழ்ச்சியை எடிட் செய்யும் பொறுப்பு பிரபல நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த நிறுவனத்திற்கு மகேந்திரன் மிகவும் நெருக்கமானவர்.
அதனாலேயே அவர் விஜய் சம்பந்தப்பட்ட விஷயங்களை எல்லாம் கட் செய்ய சொல்லி இருக்கிறார். ஏனென்றால் கமலின் ராஜ்கமல் நிறுவனம் விஜய்யை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்று ஆசைப்பட்டது. அது குறித்து கேட்டபோது விஜய் தேதிகளை கொடுக்க மறுத்திருக்கிறார்.
அதன் காரணமாகவே மகேந்திரன் இப்படி ஒரு வில்லத்தனத்தை செய்திருக்கிறார். இதன் மூலம் அட்லி தான் விஜய்யின் கோபத்திற்கு ஆளாக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். இப்படி பற்றி எரிந்து கொண்டிருக்கும் இந்த விவகாரத்தில் கமல் ஏன் தலையிடவில்லை என்பதுதான் மிகப்பெரும் கேள்விக்குறியாக இருக்கிறது.