கமல் குழந்தை நட்சத்திரமாகவே சினிமாவில் அறிமுகமாகி பல ஹிட் படங்களை கொடுத்து வந்தார். மேலும் கமல் கதாநாயகனாக நடிக்கும் போது தான் ரஜினி சினிமாவிற்குள் நுழைந்தார். அந்தச் சமயத்தில் வில்லன், குணச்சித்திரம் போன்ற கதாபாத்திரங்களில் தான் ரஜினி நடித்து வந்தார். அதன் பிறகு தனது ஸ்டைல் மற்றும் நடிப்பு திறமையால் கமலை பின்னுக்கு தள்ளி ரஜினி முன் வந்தார்.
மேலும் கமல், ரஜினி இருவருமே மாறி மாறி ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களாக மாறினார். ஒரு கட்டத்தில் ரஜினியின் மார்க்கெட் உச்சத்தை தொட்ட நிலையில் கமல் பின்தங்கி இருந்தார். அதுமட்டுமின்றி நான்கு வருடங்களாக அவருடைய படங்கள் எதுவும் வெளியாகாமல் இருந்தது.
அப்போது தான் லோகேஷ் உடன் கூட்டணி போட்டு பிளாக்பஸ்டர் ஹிட் படமான விக்ரம் படத்தை கொடுத்திருந்தார். இந்த படத்தின் மூலம் கமலுக்கு மிகப்பெரிய பெயர் கிடைத்தது. ஆனால் தன்னுடைய கடைசி படத்தை லோகேஷ் தான் இயக்க வேண்டும் என ரஜினி முடிவெடுத்துள்ளார். அதுமட்டுமின்றி இந்த படத்தால் ரஜினிக்குள் நிறைய மாற்றங்கள் வந்துள்ளது.
பொதுவாக மற்ற ஹீரோக்களை தனது படத்தில் நடிக்க வைக்க ரஜினி சம்மதிக்க மாட்டார். ஆனால் ஜெயிலர் படத்தில் பெரிய ஸ்டார்கள் எல்லாம் நடிக்கிறார்கள். அடுத்ததாக ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் படத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார். இந்த படமும் ஒரு மல்டி ஸ்டார் படமாக தான் உருவாக இருக்கிறதாம்.
மேலும் இந்த படத்தில் ரஜினிக்கு கதாநாயகியே இல்லையாம். விக்ரம் படத்தில் அப்படித்தான் கமல் ஜோடி இல்லாமல் நடித்த நிலையில் ரஜினியும் தனக்கு கதாநாயகி இல்லாமல் இந்த படத்தில் களம் இறங்க உள்ளார். இவ்வாறு தனது படத்தின் வெற்றிக்காக எப்போதுமே செய்யாத விஷயங்களை ரஜினி இப்போது செய்ய முன்வந்துள்ளார்.
கமலின் இந்த புதிய முயற்சியால் தான் தற்போது சினிமாவில் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளார். ஆகையால் நாமும் பழைய பஞ்சாங்கத்தையே பாடிக்கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது என கமல் போல் களத்தில் குதித்துள்ளார் ரஜினி. இது அவருக்கு வெற்றியை கொடுக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.