தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.. சூர்யாவுக்காக விட்டுக் கொடுத்த கார்த்தி

Suriya-Karthi: சூர்யா, கார்த்தி இருவருமே பிஸியாக நடித்து வருகின்றனர். அதில் சமீபத்தில் வெளிவந்த ரெட்ரோ படம் கலவையான விமர்சனங்களை தான் சூர்யாவுக்கு கொடுத்தது.

ஆனாலும் படகுழுவினர் கேக் வெட்டி படம் 100 கோடியை தாண்டி வசூலித்ததை கொண்டாடி விட்டனர். இது ஒரு பக்கம் இருக்க சூர்யாவுக்கு அடுத்த படமாவது ஹிட் அடிக்குமா என்ற கேள்வி இருக்கிறது.

அதன்படி ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் அவர் நடித்து வருகிறார். இப்படத்திற்கு வேட்டை கருப்பு என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூட தகவல்கள் வெளிவந்துள்ளது.

சூர்யாவுக்காக விட்டுக் கொடுத்த கார்த்தி

சூர்யாவின் பிறந்த நாளில் இதை அறிவிக்க இருக்கின்றனர். அதேபோல் படத்தின் ஷூட்டிங் விரைவில் முடிய இருக்கிறது. அதை அடுத்து இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக தொடங்கிவிடும்.

மேலும் படம் தீபாவளிக்கு வெளிவரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அதே பண்டிகை நாளில் தான் கார்த்தி நடித்துள்ள சர்தார் 2 படமும் வெளிவர உள்ளது.

இது நல்ல போட்டியா இருக்கே என்று கூட சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது. ஆனால் இப்போது அண்ணனுக்கு அவசரமாக ஒரு ஹிட் வேணும் என கார்த்தி தன் படத்தை தள்ளி வைத்துள்ளார்.

அந்த வகையில் சர்தார் 2 தீபாவளியில் இருந்து பொங்கலுக்கு தள்ளி போயிருக்கிறது. தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்பது போல் சூர்யா தீபாவளி ட்ரீட் கொடுக்க உள்ளார்.

அதே நாளில் இன்னும் சில படங்களும் வருகிறது. ஆனாலும் முன்னணி ஹீரோ என்ற பட்சத்தில் சூர்யா படம் நிச்சயம் கல்லா கட்டிவிடும் என்கின்றனர்.