9 வருடத்திற்கு முன்பே மணிரத்தினத்தின் படத்தை தவறவிட்ட கார்த்தி.. டிராக் மாறிபோய் ரூட்டை பிடித்த வந்தியத்தேவன்

Actor Karthi Movie: கல்கியின் பொன்னியின் செல்வனை படமாக்க வேண்டும் என்ற மணிரத்தினத்தின் கனவு தற்போது நிறைவடைந்துள்ளது. இரண்டு பாகங்களாக வெளியான பொன்னியின் செல்வன் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. இதில் வந்தியத்தேவனாக நடித்த கார்த்தியின் நடிப்பு ரசிக்கும் வகையில் இருந்தது.

ஆனால் இந்த படத்திற்கு முன்பே மணிரத்தினத்தின் படத்தில் ஹீரோவாக நடிப்பதற்கான வாய்ப்பை கார்த்தி தட்டி கழித்திருக்கிறார். கடந்த 2004 ஆம் ஆண்டு சூர்யா, சித்தார்த், மாதவன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஆய்த எழுத்து திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் சித்தார்த் இந்த படத்தில் அர்ஜுன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஆனால் இந்த கேரக்டரின் முதல் சாய்ஸ் ஸ்ரீகாந்த் தான். இதற்காக மணிரத்தினம் நடிகர் ஸ்ரீகாந்த்தை ஆடிஷன் வைத்து எல்லாம் தேர்ந்தெடுத்திருக்கிறார். ஆனால் அந்த சமயத்தில் விபத்தில் சிக்கிய ஸ்ரீகாந்த்-திற்கு படுக்காயம் ஏற்பட்டதால் அந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போனது.  அதன் தொடர்ச்சியாக நடிகர் ஷாம்-ஐ நடிக்க வைக்க முயற்சி செய்திருக்கின்றனர்.

ஆனால் ஷாம் அந்த சமயத்தில் இயற்கை படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால் அவராலும் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது. அதன் பிறகு அந்த வாய்ப்பு சூர்யாவின் தம்பியான கார்த்திக்கு வந்தது.  ஆனால் கார்த்தி அந்த படத்தில் நடிக்க விருப்பம் இல்லாமல் வந்த வாய்ப்பை தட்டி கழித்து விட்டார். இருப்பினும் கார்த்தி அதே படத்தில் மணிரத்தினத்திற்கு உதவி இயக்குனராக பணி புரிந்தார்.

கடைசியாக தான் ஆயுத எழுத்து படத்தில் இருந்த அர்ஜுன் கதாபாத்திரத்தில் சித்தார்த்தை நடிக்க வைக்க கமிட் செய்தனர். தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவனாக நடித்த கார்த்தி, 9 வருடத்திற்கு முன்பே ஆய்த எழுத்து படத்தில் மணிரத்தினத்தின் இயக்கத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை கை நழுவவிட்டிருக்கிறார்.

அப்போது நடிப்பில் ஆர்வம் இல்லாத கார்த்தி டிராக் மாறி இயக்குனராக வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்திருக்கிறார். பிறகு அமீர் இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் படத்தில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்து, தன்னுடைய முதல் படத்திலேயே ஹிட் கொடுத்தார்.