தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஜகமே தந்திரம். வருகின்ற ஜூன் 18-ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது.
மேலும் இந்த படத்திற்கான பிரமோஷன் வேலைகளை ஏற்கனவே நெட்பிளிக்ஸ் நிறுவனம் தொடங்கி விட்டது. அந்தவகையில் இயக்குனர்கள் மற்றும் படக்குழுவினர்கள் சார்பாக ஒவ்வொருவரும் பல யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்து வருகின்றனர்.
அப்படி கார்த்திக் சுப்புராஜ் பேட்டி கொடுக்கையில் ஜகமே தந்திரம் படத்தில் நீங்கள் எதிர்பார்த்த இந்த குறிப்பிட்ட இரண்டு விஷயங்கள் படத்தில் இருக்காது என கூறியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளார்.
ஜகமே தந்திரம் படம் முடிந்தவுடன் படத்தின் ஒவ்வொரு பாடல்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தனர். அந்தவகையில் கடைசியாக வெளியான புஜ்ஜி பாடல் மற்றும் நேத்து பாடல் போன்றவை ரசிகர்களிடையே செம ஹிட் அடித்தது.
ஆனால் இந்த இரண்டு பாடல்களும் படத்தில் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். படத்தின் மொழிமாற்றம் கருதி இந்த பாடல் காட்சிகளை வைக்க முடியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த இரண்டு பாடல்களையும் கடைசியாக வெளியான ஜகமே தந்திரம் படத்தின் டிரைலரையும் ஒப்பிட்டு இந்த பாடலுக்கு பிறகு கண்டிப்பாக சண்டை காட்சி இருக்கும் என யூகித்து இணையதளங்களில் பேசி வந்தனர். ஆனால் பாடலே படத்தில் இல்லை என கார்த்திக் அனைவருக்கும் பல்பு கொடுத்துவிட்டார்.
