1. Home
  2. கோலிவுட்

ரெட்ரோவால் நொந்துபோன கார்த்திக் சுப்புராஜ்.. சினிமா விமர்சகர்களுக்கு வைத்த வேண்டுகோள்

ரெட்ரோவால் நொந்துபோன கார்த்திக் சுப்புராஜ்.. சினிமா விமர்சகர்களுக்கு வைத்த வேண்டுகோள்

Karthik Subbaraj : கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் மே ஒன்பதாம் தேதி ரெட்ரோ படம் வெளியானது. தன்னுடைய பேட்ட படத்திற்குப் பிறகு இந்த படம் ரசிகர்களை கவரும் என்று கார்த்திக் சுப்புராஜ் பேட்டிகளில் கூறியிருந்தார்.

அதோடு படத்தின் ரிலீஸுக்கு முன்பே வெளியான கனிமா பாடல் பட்டி தொட்டி எங்கும் பரவியது. ஓரளவு நல்ல வசூலை ரெட்ரோ படம் பெற்றிருந்தாலும் சில கலவையான விமர்சனங்களை பெற்றது. அதாவது திரைக்கதை ஆரம்பத்தில் மிக வேகமாக சென்ற நிலையில் இரண்டாம் பாதியில் தடுமாற்றத்தை சந்தித்தது.

நாசர், பிரகாஷ்ராஜ் போன்ற நடிகர்களின் கதாபாத்திரங்கள் சக்தி வாய்ந்ததாக அமையவில்லை. கருணாகரன் போன்ற நடிகர்களை சும்மா பயன்படுத்தி இருப்பதாக சினிமா விமர்சகர்கள் சுட்டிக்காட்டி இருந்தனர். இந்த சூழலில் கார்த்திக் சுப்புராஜ் பேட்டி ஒன்றில் இது குறித்து பேசியிருக்கிறார்.

கார்த்திக் சுப்புராஜ் சினிமா விமர்சகர்கள் குறித்து பேச்சு

அதாவது திரைப்படங்கள் எப்போதும் உங்களை பாதிக்காது. சிலர் மக்களை திரைப்படங்களுக்கு போகாமல் தடுப்பதை சமூக சேவையாக கருதி வருகிறார்கள். மது குடிப்பதை, சிகரெட் பிடிப்பதை தடுக்கலாம். படம் பார்ப்பதை ஏன் தடுக்க வேண்டும்.

ரசிகர்களிடம் விட்டு விடுங்கள் அவர்கள் முடிவு செய்யட்டும். நல்ல படங்களை ஆண்டவன் சோதிப்பான், ஆனால் கைவிட மாட்டான் என்று கார்த்திக் சுப்புராஜ் கூறியிருக்கிறார். அதாவது சினிமா விமர்சனகளின் விமர்சனங்களால் ரசிகர்கள் தியேட்டருக்கு வருவதில்லை என்ற வேதனையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இப்போது படங்கள் மற்றும் ரசிகர்கள் இடையே மிகப்பெரிய பாலமாக இருப்பது சினிமா விமர்சகர்கள் தான். அவர்கள் நினைத்தால் ஒரு படத்தை ஓடவும் செய்ய முடியும், தோல்வி படமாகவும் மாற்ற முடியும் என்பது பல இயக்குனர்கள், தயாரிப்பாளர்களின் எண்ணமாக இருக்கிறது.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.