1. Home
  2. கோலிவுட்

4 வருட நிகழ்ச்சியிலிருந்து விலகிய கரு.பழனியப்பன்.. காரணத்தைக் கேட்டு உறைந்து போன திரையுலகம்

4 வருட நிகழ்ச்சியிலிருந்து விலகிய கரு.பழனியப்பன்.. காரணத்தைக் கேட்டு உறைந்து போன திரையுலகம்
ஜீ தமிழில் 4 வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பான தமிழா தமிழா நிகழ்ச்சியில் இருந்து விலக்கப்பட்ட கரு பழனியப்பன்.

கடந்த 4 வருடங்களாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த தமிழா தமிழா என்ற நிகழ்ச்சியை வெற்றிகரமாக தொகுத்து வழங்குபவர் நடிகரும் இயக்குனருமான கரு பழனியப்பன். ஆனால் அவர் அந்த நிகழ்ச்சியில் இருந்து விலக்கப்பட்டுள்ளார். இதற்கான காரணம் என்ன என்பது தெரிந்த பிறகு திரையுலகமே அதிர்ச்சி அடைந்துள்ளது.

சன் டிவியில் நடத்தப்பட்ட அரட்டை அரங்கம், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கோபி நாத்-தின் நீயா நானா போன்ற நிகழ்ச்சிகளுக்கெல்லாம் பயங்கர டஃப் கொடுக்கும் ஜீ தமிழ் சேனலில் தமிழா தமிழா நிகழ்ச்சிக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இதில் ஒவ்வொரு வாரமும் ஒரு குறிப்பிட்ட டாபிக்கை எடுத்து மக்கள் பேசுவார்கள்.

அந்த நிகழ்ச்சியை கரு பழனியப்பன் சிறப்பாகத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். ஆனால் அவர் நிகழ்ச்சியில் பெரும்பாலும் திராவிட அரசியல் பேசுவதால் பலமுறை ஜீ தமிழ் கண்டித்திருக்கிறது. இருப்பினும் நான் இப்படிதான் இருப்பேன் என்று, அடுத்தடுத்த நிகழ்ச்சியில் தன்னுடைய மனதில் பட்ட கருத்துக்களை எல்லாம் பதிவு செய்து கொண்டிருந்தார்

கடைசியில் நான்கு வருட பந்தத்தை முறித்துக் கொள்ளும் வகையில் தமிழா தமிழா நிகழ்ச்சிகளில் இருந்து கரு பழனியப்பனை ஜீ தமிழ் விலக்கி உள்ளது. இது குறித்து கரு பழனியப்பன் சோசியல் மீடியாவில் காட்டமான பதிவை பதிவிட்டுள்ளார். தமிழா தமிழா நிகழ்ச்சியில் சமூக நீதி, சுயமரியாதை, திராவிடம் என்றெல்லாம் பேசினால், அது கசப்பாக இருக்கும் என்பதால் அந்த பயணத்தை முடித்துக் கொள்வதே நல்லது. என்னுடைய கருத்தை எப்போதுமே வெளிப்படையாக சொல்லுவேன். அதற்கு யாரும் தடை சொல்ல முடியாது.

காட்டாறுக்கு தடை போட முடியுமா! அப்படி தான், திராவிட கருத்துக்களை நான் பேசக்கூடாது என சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்று கரு பழனியப்பன் தமிழா தமிழா நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியதை தெரியப்படுத்தியுள்ளார். இவருடைய இந்த பதிவை பார்க்கும் போது கரு பழனியப்பன் தமிழா தமிழா நிகழ்ச்சியில் இருந்து தாமாக விலகவில்லை. ஜீ தமிழ் தான் அவரை தூக்கி எறிந்துவிட்டது என்பது தெரிகிறது.

இதன்பிறகு தமிழா தமிழா நிகழ்ச்சியை அடுத்து யார் தொகுத்து வழங்குவார் என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்துள்ளது. இந்த வார ஞாயிற்றுக்கிழமையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் கரு பழனியப்பனுக்கு பதில் தமிழா தமிழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பிரபலம் யார் என்பது தெரிந்துவிடும்.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.