விஜயகாந்தை சோதித்துப் பார்த்த அரசியல் கட்சி.. சூழ்ச்சியால் திக்குமுக்காடிய தருணம்

பெரும்பாலும் நடிகர்கள் தங்களுடையா படங்களிலும் நடிக்கும் கதாபத்திரம் நல்லவராக, மக்களுக்கு உதவும் குணம் கொண்டவர்கவே நடிப்பார்கள். அது அவர்களின் நிஜ வாழ்வின் பிண்பம் என காட்டி கொள்வதில் முனைப்பாக இருப்பார்கள். அரசியல் நாட்டமுள்ள அனைவரும் இதையே செய்து வருகிறார்கள். எம்.ஜி.ஆர் முதல் விஜய் வரை பெரும்பாலான நடிகர்கள் இதை செய்துள்ளனர்.

ஆனால் எம்.ஜீ.ஆருக்கு அமைந்ததுபோல அத்தகைய பிம்பம் பலருக்கு இல்லை. ரஜினி, கமல் என இருபெரும் துருவங்கள் கோலோச்சிய களத்தில், சினிமாவிற்கான எந்த அடையாளமும், தொடர்ப்பும் இன்றி சினிமாவில் நுழைந்த வெற்றி கண்டவர் விஜயகாந்த். 1980 முதல் 2000ஆம் ஆண்டுகளின் முற்பகுதி வரை சினிமாவில் முக்கிய நடிகராக இருந்த விஜயகாந்த் 2005ஆம் ஆண்டு தன் சொந்த ஊரான மதுரையில் மக்கள் முன்பு தேசிய முற்போக்கு திராவிட கழகம் எனும் கட்சியைத் தொடங்கினார்.

கடந்த 2006ஆம் ஆண்டு அப்போது ஆட்சியில் இருந்த தி.மு.க அரசு போக்குவரத்தை சீர் செய்ய சென்னை கோயம்பேட்டில் புதியதாக ஒரு மேம்பாலம் கட்ட போவதாக அறிவித்தது. அதற்கு இடையுறாக இருக்கும் விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் மண்டபத்தை இடிக்க நோட்டீஸ்’உம் அனுப்பி இருந்தது. அந்த நோட்டீஸ்’உடன் அப்போதைய முதல்வர் கருணாநிதியை சந்திக்க சென்றார் விஜயகாந்த்.

மண்டபம் பற்றி வினாவிய பொழுது, அது பொது பணி துறையிடம் உள்ளதாகவும், தன்னால் ஒன்றும் செய்ய இயலாது என கூறி உதவிட முடியாது எனவும் கூறியுள்ளார். விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் திருமண மண்டபத்தில் ஒரே நேரத்தில் 3000 மேல் ஒருசேர முடியும் என்பதால் அதனை இடிக்க அப்போதைய ஆளும் கட்சி முடிவித்திருந்தது.

அந்த மண்டபத்தை இடிப்பதில் இருக்கும் அரசியல் காழ்ப்புணர்ச்சியை புரிந்து கொண்ட விஜயகாந்த், மக்களுக்கு நல்லது நடைபெறும் என்றால் இடித்து கொள்ளுங்கள் என கூறி வந்துள்ளார். சொல்லியபடியே 2007ஆம் ஆண்டு அந்த மண்டபம் இடிக்கப்பட்டது. அப்போழுது அவருக்கு இருந்த நல்ல மனதை புரிந்து கொள்ளாத மக்கள், பின்நாளில் அவரை மிகவும் கேலி, கிண்டல் செய்தனர்.

ஆனால் அவர் தற்பொழுது உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் பொழுது, இப்படி ஒரு குழந்தை மனம் கொண்ட நல்ல மனிதரை நாம் தவற விட்டோமே என வருந்தி வருகின்றனர். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் அந்த மண்டபம் இடிக்க பட்டு அந்த இடத்தில் ஒரே ஒரு 100 அடி சாலை மட்டுமே அமைந்தது. மீதியுள்ள மேம்பாலம் தள்ளியே அமைந்துள்ளது.