வசூலைக் குவித்தது எது! கேஜிஎஃப் அல்லது பீஸ்ட்.. உண்மையை உடைத்துச் சொன்ன சங்க தலைவர்!

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் இந்த மாதத்தின் 13-ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டு திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இருப்பினும் இந்த படத்திற்கு வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை என பல்வேறு விமர்சனங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

ஏனென்றால் இந்த படம் ரிலீஸ் ஆன அடுத்த நாளே ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கேஜிஎஃப் 2 திரைப்படம் திரையரங்கில் பீஸ்ட் திரைப்படத்துடன் நேருக்கு நேர் மோதிக் கொண்டிருக்கிறது.

இதில் கேஜிஎஃப் 2 தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து வசூல் சாதனை புரிந்த கொண்டிருக்கிறதே என சோஷியல் மீடியாவில் தொடர்ந்து தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

ஆனால் அது முற்றிலும் உண்மை அல்ல என்றும் மற்ற மாநிலங்களில் எப்படியோ தெரியாது, ஆனால் தமிழகத்தில் நிச்சயம் தளபதி விஜய்யின் பீஸ்ட் மட்டுமல்ல, தல அஜித்தின் வலிமை, சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த போன்ற படங்களின் அளவுக்கு கேஜிஎஃப் 2-ஆல் வசூலை குவிக்க முடியாது என திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் விளக்கமளித்திருக்கிறார்.

அதுமட்டுமின்றி தமிழகத்தில் மட்டும் மொத்தம் இருக்கும் ஆயிரம் தியேட்டர்களில் பீஸ்ட் திரைப்படம் 900 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் கூட வசூலைப் பொறுத்தவரை நம்பர் 1 இடத்தைப் பெற்று முதல் ஐந்து நாளில் பிரமிக்கத்தக்க வசூலை பெற்றுத் தந்தது.

மேலும் பீஸ்ட் திரைப்படம் நல்ல படம் என்றோ, நல்ல கதை களத்தைக் கொண்ட படம் என்றும் சொல்ல முடியாது. மாஸ் காட்டும் விஜய்காக மட்டுமே இந்த படம் வசூலைக் குவித்துக் கொண்டிருக்கிறது என்று திருப்பூர் சுப்ரமணியம் தன்னுடைய பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.