டாப் 4 நடிகர்களை மடக்கி போட்ட கிங்காங்.. வெளிவந்த நடிகர்களின் லிஸ்ட்

Kingkong : தமிழ் சினிமாவில் காமெடியின் அரசன் என்று அழைக்கப்படுபவர் கிங்காங். பார்ப்பதற்கு ஆள் சின்னதாக இருந்தாலும், நடிப்பில் கில்லி தான். இவர் நடித்திருக்கும் அனைத்து காமெடி கதாபாத்திரமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தமிழ் சினிமாவில் வடிவேலுவுடன் ஜோடி போட்டு அதிக படங்களில் நடித்திருக்கிறார் கிங்காங். தமிழ் சினிமாவில் ஒரு சாதனையை நிகழ்த்தி இருக்கிறார் என்று சொல்லலாம். தற்போது தான் கிங்காங் மகளின் திருமணம் விமர்சையாக நடந்தது.

சினிமாவில் தனது உருவத்தால் கிண்டல் செய்யப்பட்ட கிங்காங் தற்போது இந்த அளவுக்கு உயர்ந்த நிற்பது பெரும் பாராட்டுக்குரிய விஷயம் தான். தனக்கான பாணியில் காமெடி செய்து திரையில் தனக்கென்று ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டவர்.

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் பிற சினிமாக்களிலும் கிட்டத்தட்ட நான்கு சூப்பர் ஸ்டார்களுடன் நடித்து கலக்கியிருக்கிறார் கிங்காங். இது நம்மில் பலருக்கும் தெரியாத விஷயம் தான். தமிழில் ரஜினிகாந்த் உடன் அதிசய பிறவி திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ராஜா விக்ரமா திரைப்படத்தில் நடித்து கலக்கி இருக்கிறார். இதில் இவருக்கு பேரும் புகழும் கிடைத்தது. கன்னடத்தில் சிவராஜ் குமாருடன் குண்டுகாலி திரைப்படத்தில் நடித்து தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை சேர்த்தார்.

ஹிந்தியில் சல்மான்கானுடன் பாவி நம்பர் ஒன் திரைப்படத்தில் நடித்தார், அதன் பின் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஷாருக்கானுடன் சேர்ந்து தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் கிங்காங். கிட்டத்தட்ட 4 டாப் நடிகர்களுடன் நடித்து கலக்கிய காமெடி நடிகர் கிங்காங் மட்டும் தான்.