Kollywood Actress aiswarya rajesh hit back to director through social media: தமிழ் சினிமாவின் டாப் 10 ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். ஆரம்பத்தில் பட வாய்ப்புகள் தேடி கஷ்டப்பட்ட ஐஸ்வர்யா ராஜேஷிற்கு காக்கா முட்டை, வெற்றிமாறனின் வடசென்னை போன்ற படங்கள் திருப்புமுனையாக இருந்தது.
எந்த ஒரு அலட்டலும் இல்லாமல் ஃபேமிலி சப்ஜெக்ட் என்றாலும், அம்மா கேரக்டர் என்றாலும், கிராமத்து கதைகள் என்றாலும் கிடைக்கும் வாய்ப்பை தவறாது பயன்படுத்தி முன்னேறி வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேடி தேடி நடித்து வருகிறார். மேலும் தெலுங்கு, மலையாளம் சினிமாக்களிலும் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
தனது படங்களுக்கு 2 கோடி முதல் 3 கோடி வரை சம்பளம் பெரும் ஐஸ்வர்யா ராஜேஷ் விளம்பர வாய்ப்புகள் வெப் சீரிஸ் என எதையும் விட்டு வைக்கவில்லை இடையிடையே ஹாட்டான புகைப்படம் எடுத்து வலைதளங்களில் பதிவிட்டு டிரெண்ட்டிங் ஆகவும் இருந்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
வெற்றி வாய்ப்புகளை குவித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷிற்கு சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை என்னும் அளவிற்கு தற்போது தான் இலங்கையில் பொங்கல் விழாவுக்கு சென்ற ஐஸ்வர்யா ராஜேஷ் அங்குள்ள அமைச்சரிடம் பேசிய பேச்சு சர்ச்சையானது. அதேபோன்று தற்போது இயக்குனர் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ் பற்றி கூறிய கருத்துக்கள் அதிர்ச்சி அலையை கிளப்பி வருகிறது.
இயக்குனர் வீரபாண்டியன் அவர்கள் இயக்கிய “அவர்களும் இவர்களும்” படத்தின் மூலமாகத்தான் ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார் அப்போதைய காலகட்டத்தில் இந்த படத்தில் நடிப்பதற்காக கஷ்டப்பட்டு வாய்ப்பு பெற்றார் எனவும் வாய்ப்பு கேட்க வரும் போது ஆட்டோவுக்கு கூட பைசா இல்லாமல் கஷ்டப்பட்டார் எனவும் கூறியுள்ளார். மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் ராஜேஷிற்கு நன்றாக ஆட வராது, குண்டாக வேற இருப்பார் இருந்தாலும் வாய்ப்பு கொடுத்தேன். முதலில் விழாக்களில் என்னை மறக்காது நன்றியுடன் இருந்த ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது ஓவர் ஆட்டிடியூட் காட்டி வருகிறார் என்று வசைமாரி பொழிந்துள்ளார் இயக்குனர் வீரபாண்டியன்.
இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் ரிவிட் அடிக்கும் விதமாக ஐஸ்வர்யா ராஜேஷ் அளித்த பதில் ரசிகர்களை ஆமாம்சாமி போட வைத்துள்ளது உண்மை தெரியாமல் ஒரு பக்க கதையை மட்டும் வைத்துக் கொண்டு ஒருவரை குற்றம் சாட்டுவது வாழ்க்கையையும் உறவையும் அழித்துவிடும் ஒருவர் மீது குற்றச்சாட்டை சுமத்தும் முன் மொத்த கதையையும் தெரிந்து வைத்து பேச வேண்டும் என்று மறைமுகமாக இயக்குனரை விலாசியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.