கொழுந்து விட்டு எரியும் மல்யுத்த போராட்டம்.. நியாய தர்மத்தை ஓரம் கட்டி கூலாக திரியும் குஷ்பூ

எல்லாத் துறைகளிலும் பெண்களின் பாதுகாப்புக்கு எதிரான சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் நடத்தி வரும் போராட்டம் தற்போது பலரையும் கலங்கடித்து இருக்கிறது. கொழுந்து விட்டு எரியும் இந்த பிரச்சனை குறித்து தற்போது பல்வேறு கட்சி தலைவர்களும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதாவது பாஜக கட்சியின் எம் பி பிரிஜ் பூஷன் கரண்சிங் மீது சில மாதங்களுக்கு முன்னர் மல்யுத்த வீராங்கனைகள் அத்துமீறல் புகார் கொடுத்திருந்தனர். அதையடுத்து ஒரு கமிட்டி ஆரம்பித்து அதன் தலைமையில் இந்த வழக்கும் விசாரிக்கப்பட்டது. ஆனால் இதில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த இரு நாட்களாகவே டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இது பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில் பொதுமக்கள் பலரும் இந்த விஷயத்தில் பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் மத்திய அரசு சரியான நியாயம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இப்படி பெண்களுக்காக பலரும் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் சம்பந்தப்பட்ட கட்சியின் உறுப்பினர் மட்டும் தனக்கென வந்தது என்பது போல் கூலாக திரிந்து கொண்டிருக்கிறார்.

அதாவது பாஜக தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினரான குஷ்பூ எப்போதுமே நியாயம், தர்மம் என்று அலப்பறை கூட்டுவார். ஆனால் இப்போது வீராங்கனைகளின் பிரச்சனை தேசிய அளவில் பரப்பரப்பை கிளப்பி இருக்கும் நிலையில் அவர் இதை கொஞ்சம் கூட கண்டு கொள்ளவில்லை. அதற்கு மாறாக பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தை பார்த்துவிட்டு கூலாக விமர்சனம் கொடுத்து வருகிறார்.

தற்போது வெளிநாட்டில் இருக்கும் அவர் அங்கு ஐமேக்சில் படத்தை கண்டு களித்தேன் என்றும் மணிரத்தினம், ஏ ஆர் ரகுமான் ஆகியோரின் திறமை பற்றியும் அளந்து விட்டுக் கொண்டிருக்கிறார். இதுதான் இப்போது ரசிகர்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது. தற்போது சோசியல் மீடியாவில் இந்த பிரச்சனை மனவேதனையுடன் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

kushbhu-twitter
kushbhu-twitter

அப்படி இருக்கும் பட்சத்தில் குஷ்பூ இது குறித்து எந்த ஒரு அறிக்கையும் வெளியிடாதது ஏன் என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். மேலும் உங்கள் நீதி எல்லாம் மற்றவர்களுக்கு தானா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இப்படி கட்சிக்கு ஆதரவாக இருக்கும் குஷ்பூ வெட்டி பேச்சு பேசுவதற்கு தான் லாயக்கு எனவும் ரசிகர்கள் கோபத்துடன் திட்டி தீர்த்து வருகின்றனர். தற்போது இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில் சீமான் உள்ளிட்ட பல தலைவர்களும் இது குறித்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய் - கடந்த 13 வருடங்களாக தமிழ் சினிமா செய்திகளை ரசிகர்களுக்கு கொண்டு சென்று வருகிறார். Google News approved publisher, 1.3 மில்லியன் YouTube subscribers, 1.3 மில்லியன் Facebook subscribers,1.4 லட்சம் Instagram followers உடன் தமிழ் சினிமா உலகில் நம்பகமான தகவல் ஆதாரமாக விளங்கி வருகிறார்.

View all posts →