தலையில் மிளகாய் அரைக்க பார்த்த லியோ டீம்.. ரிவிட் அடித்த லலித், உறைந்து போய் நிற்கும் விஜய்

Lalith and Leo Team: இந்த வருடத்தில் வெளிவந்த அனைத்து படங்களையும் பின்னுக்கு தள்ளும் அளவிற்கு லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி அன்று திரையரங்குகளை ஆர்ப்பரிக்கப் வருகிறது. அத்துடன் ரசிகர்களும் இப்படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை வைத்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கிடையில் லியோ படத்தின் ஆடியோ லான்ச் கேன்சல் ஆனாலும் பரவாயில்லை எங்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக செகண்ட் சிங்கிள்ஸ் பாடல் வரிகள் தாறுமாறாக வந்திருக்கிறது என்று ரசிகர்கள் ஆனந்தப்பட்டு வருகிறார்கள். அத்துடன் தற்போது ஒரு வாரமாக இப்படத்தின் உள்ள பாடலுக்கு ஆடிய டான்ஸ் மாஸ்டர்கள் ஒரு பிரச்சினையை கிளப்பியிருக்கிறார்கள்.

இதுதான் இப்போதைக்கு ஹாட் டாபிக்காக சினிமா வட்டாரத்துக்குள் பேசப்பட்டு வருகிறது. அதாவது லியோ படத்தில் உள்ள பாடலுக்கு மொத்தமாக 1200 டான்ஸ் மாஸ்டர்கள் ஆடி இருக்கிறார்கள். அதில் 200 டான்ஸ் மாஸ்டர்கள் மட்டுமே முறையான நடனத்தை கற்றுக் கொண்டு அதற்கான சங்கத்தில் இருந்து வந்தவர்கள். மீதியுள்ள 1000 பேர் தினசரி சம்பளத்திற்காக ஆடும் நடன கலைஞர்கள்.

அதனால் சங்கத்தின் படி முறையாக வந்த டான்ஸ் மாஸ்டருக்கு ஒரு நாள் சம்பளமாக 4000 ரூபாய் மற்றும் 750 ரூபாய் பேட்டா என்று வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் தினசரி கூலியாக வந்து ஆடிய டான்ஸ் மாஸ்டர்களுக்கு ஒரு நாள் சம்பளமாக 800 முதல் 1000 ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் இந்த கலைஞர்களும் எங்களுக்கு அதே போலவே சம்பளம் வேண்டும் என்று கேட்டு ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள்.

ஆனால் இந்த மாதிரி ஒரு விஷயம் எங்கேயுமே நடக்காது என்பதால் இப்படத்தின் தயாரிப்பாளர் லலித் என்ன செய்வது என்று யோசனையுடன் இருந்திருக்கிறார். அப்பொழுது கண்டிப்பாக இந்த மாதிரி ஒரு விஷயம் சாத்தியம் இல்லாதது, அவர்கள் அனைவரும் தன்னை ஏமாற்றுகிறார்கள் என்று உஷாராகி இந்த விஷயங்கள் அனைத்திற்கும் ரிவிட் அடித்திருக்கிறார்.

அதாவது முறைப்படி கற்று வந்த நடன கலைஞர்களுக்கு இந்த சம்பளம் தான் மற்றும் தினசரி கூலியாக வந்து ஆடிய டான்ஸ் மாஸ்டர்களுக்கு சம்பளம் இதுதான் என்று ஏற்கனவே வரையறுக்கப்பட்ட விஷயம் தான். அதனால் இதை வைத்து யாரும் சம்பளத்தை அதிகமாக கேட்க வேண்டாம் என்று உஷாராக பதிலடி கொடுத்திருக்கிறார். அத்துடன் இந்த ஒரு விஷயம் நியாயமாக தான் இருக்கிறது என்று விஜய்யும் மௌனம் காத்து அப்படியே லலித்துடன் நிற்கிறார்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →