1. Home
  2. கோலிவுட்

தம்பியுடன் களத்தில் இறங்கும் லாரன்ஸ்.. யாரும் எதிர்பாராத கூட்டணி

தம்பியுடன் களத்தில் இறங்கும் லாரன்ஸ்.. யாரும் எதிர்பாராத கூட்டணி

லாரன்ஸ் தற்போது ருத்ரன் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் போஸ்டர் மற்றும் ரிலீஸ் தேதி அண்மையில் வெளியானது. அதாவது கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் மாதம் ருத்ரன் படம் வெளியாக உள்ளது. இப்படம் லாரன்ஸ் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிளாக்பஸ்டர் ஹிட் ஆன சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் லாரன்ஸ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இப்படத்தை பி வாசு இயக்கயுள்ளார். மேலும் சமீபத்தில் இப்படத்தின் பூஜை போடப்பட்டது. இதில் அனுஷ்கா, வடிவேலு ஆகியோர் நடிக்கவுள்ளனர். இந்நிலையில் லாரன்ஸ் ரஜினியின் தீவிர ரசிகர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ரஜினி நடிப்பில் வெளியான பிளாக்பஸ்டர் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் வாய்ப்பு லாரன்ஸுக்கு கிடைத்தது. தற்போது லாரன்ஸின் மற்றொரு படத்திற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. சூப்பர் ஸ்டாரின் ஆஸ்தான இயக்குனரான கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் லாரன்ஸ் நடிக்கயுள்ளார். ரஜினிகாந்துக்கு முத்து, படையப்பா என பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த உடன் மட்டுமல்லாமல் தற்போது ரஜினி நடிக்க உள்ள ஜெயிலர் படத்திலும் கேஎஸ் ரவிக்குமார் பணியாற்ற உள்ளார். சில வருடங்களாக நடிப்பில் கவனம் செலுத்தி வந்த கேஎஸ் ரவிக்குமார் மீண்டும் படங்களை இயக்க முடிவெடுத்துள்ளார். தற்போது உருவாக உள்ள படத்தில் லாரன்ஸின் தம்பி எல்வின் அவர்களும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதுவரை எல்வின் தனது அண்ணன் லாரன்சுடன் சில பாடல்களில் நடனம் ஆடி உள்ளார். ஆனால் முதல்முறையாக இப்படத்தில் நடிகராக அறிமுகமாக உள்ளார். இப்படத்தின் பூஜை நேற்று போடப்பட்டது. விரைவில் இப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கயுள்ளது. மேலும் காமெடி, ஆக்சன் என இரண்டும் கலந்த மாசான படமாக இப்படம் இருக்கும் என கூறப்படுகிறது.
Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.