308 பெண்களை டேட்டிங் செய்த லியோ பட நடிகர்
Leo Movie: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவு பெற இருக்கிறது. அதை அடுத்து பட குழு வேற லெவல் ப்ரமோஷனுக்கான ஏற்பாடுகளையும் தடபுடலாக செய்து வருகிறது. அது மட்டும் இன்றி விஜய் பிறந்தநாளில் படத்தின் முதல் பாடலை வெளியிடுவதற்கான வேலையும் ஜோராக நடந்து கொண்டிருக்கிறது.
இப்படி ஜெட் வேகத்தில் வேலையை பார்த்து வரும் லோகேஷ் இதன் மூலம் உச்சகட்ட எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். இது ஒரு புறம் இருக்க லியோ படத்தில் நடித்து வரும் நடிகர்கள் சம்பந்தப்பட்ட பல விஷயங்கள் இப்போது மீடியாவில் வைரலாகி கொண்டு இருக்கிறது. ஏற்கனவே அர்ஜுன் சூட்டிங் ஸ்பாட்டில் ஓவர் ஆட்டிடியூட் காட்டி வருகிறார் என்ற செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் மற்றொரு நடிகர் பற்றிய விஷயமும் வெளியாகி அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது. அதாவது இந்த லியோ படத்தில் பாலிவுட் நடிகரான சஞ்சய் தத் முக்கிய கதாபாத்திரத்தில் இடம்பெறுகிறார். அந்த வகையில் அவர் பட குழுவினரோடு எடுத்துக் கொண்ட போட்டோ ஏற்கனவே மீடியாவில் களை கட்டியது. இந்நிலையில் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தமான விஷயம் ஒன்று இப்போது லீக் ஆகி இருக்கிறது.
அதாவது சஞ்சய் தத் எப்போதுமே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாதவர். பல வருடங்களுக்கு முன்பு ஒரு குற்றத்திற்காக இவர் சிறை தண்டனை பெற்றதே மிக பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. அதையெல்லாம் தாண்டி மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் இவரின் வாழ்க்கை வரலாறு ஒரு படமாகவே வந்திருக்கிறது. சஞ்சு என்ற பெயரில் ஹிந்தியில் வெளிவந்த அப்படத்தில் ரன்பீர் கபூர் சஞ்சய் தத் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
அப்போது அவர் 308 பெண்களுடன் அந்தரங்க தொடர்பில் இருந்த விஷயம் காட்டப்பட்டிருந்தது. இது பலருக்கும் அதிர்ச்சியை கிளப்பிய நிலையில் இயக்குனர் அதை உறுதிப்படுத்தி இருந்தார். அதாவது பெண்களை கவர்வதில் சஞ்சய் தத் மிகவும் கில்லாடி. செண்டிமெண்டாக பேசி அவர்களை தன் வலையில் விழ வைக்கும் வித்தையும் அவருக்கு தெரியும்.
அந்த வகையில் தன் அம்மாவின் கல்லறைக்கு பெண்களை அழைத்துச் சென்று அவர்களை சென்டிமென்டாக லாக் செய்வார். அப்போது அவர்களின் ரியாக்ஷனை பார்த்துவிட்டு அதற்கேற்றார் போல் சில தில்லுமுல்லு வேலைகளையும் செய்து அவர்களுடன் டேட்டிங் செய்வாராம். இதை சில வருடங்களுக்கு முன்பே இயக்குனர் வெளிப்படையாக கூறியிருந்தார். ஆனால் இப்போது லியோ படத்தில் இவர் நடித்து வரும் நிலையில் இந்த தகவல் தீயாக பரவி தமிழ் ரசிகர்களை அதிர்ச்சியாக்கி இருக்கிறது.
