கௌதம் மேனனை விட இரண்டு மடங்கு அதிக சம்பளம் வாங்கும் மிஷ்கின்.. சம்பளத்தை வாரி இறைக்கும் லியோ படக்குழு

விஜய்யின் படங்கள் அனைத்தும் முந்தைய படங்களை விட அதிக பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. மாஸ்டரை விட அதற்கு அடுத்ததாக வந்த வாரிசு மிகப்பெரிய பட்ஜெட்டிலும், தற்போது வாரிசை விட லியோ அதைவிட பெரிய பட்ஜெட்டிலும் தயாராகி வருகிறது.

முன்பு விஜய் ரீஜனல் ஆக்டர் ஆக தான் இருந்தார். தமிழில் மட்டும் தான் அவருடைய ஃபோக்கஸ் இருக்கும். தெலுங்கில் அவருடைய படங்கள் டப்பிங் செய்யப்பட்டு ஓரளவு பரவாயில்லாமல் ஓடும். ஆனால் இப்போது விஜய்க்கு நேஷனல் அளவில் பான் இந்தியா ஸ்டார் ஆக மாற வேண்டும் என்பதில் முனைப்புடன் செயல்படுகிறார்.

இதனால் இவருடைய படங்களில் எல்லாம் அந்தந்த மொழிகளில் இருக்கும் நடிகர்களை தன்னுடைய படங்களில் தேர்வு செய்து நடிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். அப்படி தான் பாலிவுட் பிரபலம் சஞ்சய் தத் அவர்களை லியோ படத்தில் உள்ளே கொண்டு வந்திருக்கிறார்.

இதனால் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது. சஞ்சய் தத் மட்டுமல்ல இந்த படத்தில் பெரிய திரை பட்டாளமே இணைந்து நடிக்கிறது. இப்பொழுது இயக்குனர்கள் எல்லோரும் நடிப்பதற்கு கிளம்பி விட்டனர்.

சில இயக்குனர்களை நீங்க தான் நடிக்க வேண்டும் என்று போட்டி போட்டு அழைக்கின்றனர். அப்படி போட்டி போட்டு கூப்பிடும் இயக்குனர்களுள் மிஸ்கினுக்கு ஒரு நல்ல மாஸ் இருக்கிறது. இவர் ஒரு நாளைக்கு 10 லட்ச ரூபாய் சம்பளம் வாங்குகிறார். கௌதம் வாசுதேவன் மேனனுக்கு 5 லட்ச ரூபாய் தான் சம்பளமாம்.

இப்படித்தான் லியோ படத்திற்கு இவர்கள் புக் செய்யப்பட்டுள்ளனர். மேலும் நீண்ட நாட்களுக்குப் பிறகு த்ரிஷா இந்த படத்தில் கதாநாயகியாக விஜய் உடன் இணைந்து நடிக்கிறார். இவருக்கு சம்பளமாக 3 கோடி பேசப்பட்டு இருக்கிறது. இவ்வாறு லியோ படத்தில் நடிக்கும் பிரபலங்கள் அனைவருக்கும் தயாரிப்பு நிறுவனம் சம்பளத்தை வாரி இறைத்து வெற்றி ருசிக்க காத்திருக்கிறது.