விஜய் சேதுபதியால் கிடைத்த வாழ்வு..

தமிழ் சினிமாவில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கும் ஒரே நடிகர் என்றால் அது விஜய் சேதுபதியாக மட்டும் தான் இருக்க முடியும். அந்த அளவுக்கு தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் அவர் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

மாதத்தில் இரண்டு மூன்று நாட்களைத் தவிர அனைத்து நாட்களும் அவர் ஏதாவது ஒரு சூட்டிங்கில் பிசியாக தான் இருக்கிறாராம். இப்படி ஓய்வில்லாமல் உழைத்துக் கொண்டிருக்கும் அவர் தன்னுடைய சம்பளத்தையும் உயர்த்தி எக்கச்சக்கமாக கல்லா கட்டி வருகிறார்.

அவர் மட்டுமல்லாமல் அவரை சுற்றி இருக்கும் நபர்களும் இதனால் நல்ல லாபம் பார்த்து வருகின்றனர். அந்த வகையில் விஜய் சேதுபதியின் மேக்கப் மேன் தற்போது சென்னை போரூரில் சொந்தமாக ஒரு பிரம்மாண்ட வீட்டை கட்டி இருக்கிறாராம். அதன் செலவு மட்டுமே கிட்டதட்ட இரண்டு கோடியாம்.

இதுதான் தற்போது கோலிவுட்டில் பரபரப்பு செய்தியாக பேசப்பட்டு வருகிறது. இத்தனை கோடியில் வீடு கட்டி இருக்கிறார் என்றால் அவருடைய சம்பளம் எவ்வளவு இருக்கும் என்று பலரும் யோசித்து வருகின்றனர். பொதுவாக முன்னணி நட்சத்திரங்கள் தங்கள் உடையலங்காரம், மேக்கப் போன்றவற்றிற்காக தனித்தனி உதவியாளர்களை நியமித்துக் கொள்வார்கள்.

அவர்களுக்கான ஒரு நாள் சம்பளமே நாம் எதிர்பார்க்காத அளவில் இருக்கும். அதே போன்று தான் விஜய் சேதுபதியின் மேக்கப் மேன் ஒரு நாளைக்கு 50 ஆயிரத்திற்கு மேல் சம்பளமாக வாங்குவதாக கூறப்படுகிறது. அப்படி பார்த்தால் ஒரு படத்திற்கே அவர் லட்ச கணக்கில் சம்பளமாக பெற்று விடுவார்.

அதிலும் விஜய் சேதுபதி தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்து வருவதால் தான் உதவியாளருக்கும் கை மேல் காசு கிடைக்கிறதாம். இதை கேள்விப்பட்ட தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கின்றனர். ஏனென்றால் உதவியாளர்களுக்கும் அவர்கள் தானே சம்பளம் கொடுக்கிறார்கள்.