தமிழ் சினிமாவை பொருத்தவரையில் வாரி வழங்கும் வள்ளல்கள் என்றால் எம்ஜிஆர் மற்றும் விஜயகாந்த் தான். இவர்கள் தங்களிடம் உதவி என்று கேட்டு வருபவர்களிடம் தங்களால் முடிந்த அளவுக்கு உதவி செய்யக்கூடியவர்கள். அதுவும் எம்ஜிஆர் வீட்டில் 24 மணி நேரமும் அடுப்பு எரிந்து கொண்டே இருக்குமாம்.
அதாவது தன்னை பார்க்க வருபவர்களை வயிறு, மனமும் நிறைய செய்து தான் எம்ஜிஆர் அனுப்புவாராம். அதேபோல் தான் கேப்டன் விஜயகாந்த் அவர்களும், சூட்டிங் ஸ்பாட்டில் எல்லோருக்கும் என்ன சாப்பாடு செய்கிறார்களோ அதை தான் அவரும் சாப்பிடுவாராம். அதுமட்டும்இன்றி பலருக்கு சினிமா வாய்ப்பையும் விஜயகாந்த் பெற்று தந்துள்ளார்.
இந்நிலையில் எம்ஜிஆர், விஜயகாந்த் போல வாரிசு நடிகை ஒருவர் தங்க காசுகளை வாரி வழங்கி உள்ளார். அதாவது சினிமாவில் வாரிசு நடிகையாக நுழைந்த கீர்த்தி சுரேஷ் டாப் நடிகர்கள் உடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். இப்போது தமிழைக் காட்டிலும் தெலுங்கு சினிமாவில் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்.
அந்த வகையில் நானி நடிப்பில் உருவாகியுள்ள தசரா படத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் விரைவில் ரிலீசுக்கு காத்திருக்கிறது. இப்போது படத்துக்கான பிரமோஷன் வேலை மும்மரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் தசரா படத்தில் வேலை செய்த 1330 பேருக்கு கீர்த்தி சுரேஷ் தலா 10 கிராம் மதிப்புள்ள தங்க காசுகளை வழங்கி உள்ளார். இதற்கான தொகை கிட்டத்தட்ட 75 லட்சத்திலிருந்து 80 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. பொதுவாக உச்ச நடிகர்களான ரஜினி, கமல், விஜயகாந்த் போன்ற பிரபலங்கள் தான் தங்க காசுகளை பரிசாக வழங்கிய வரலாறு உண்டு.
முதல் முதலாக நடிகை ஒருவர் தொழிலாளர்களுக்கு தங்க காசுகள் வழங்கியது சினிமா திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. கீர்த்தி சுரேஷ் இவ்வாறு செய்ததற்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது. அதுமட்டுமின்றி தசரா படத்திற்காக அவரது ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.