விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. இதற்கான ப்ரோமோ வீடியோ சமீபத்தில் வெளியாகி இணையதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது. மேலும் இப்படத்தை பான் இந்தியா அளவில் எடுப்பதற்காக முயற்சி செய்து வருகிறார். அதற்காகவே இந்த படத்தில் மற்ற மொழி முன்னணி நடிகர்களையும் தேர்வு செய்திருக்கிறார்.
இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் தமிழ் சினிமாவின் வரலாற்றை மாற்றி அமைக்கப்பட்டது. அந்த அளவிற்கு இவரது படங்கள் விறுவிறுப்பாகவும், வித்தியாசமாகவும் இருக்கும். இந்த படம் ரசிகர்கள் மட்டுமல்லாமல் சினிமா வட்டாரத்தில் உள்ளவர்களும் இப்படத்தை பெரிய அளவில் எதிர்பார்த்து வருகிறார்கள்.
இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. அங்கே படப்பிடிப்பின் போது பனிப்பொழிவு அதிகமாக ஏற்பட்டதால் தடைகள் ஏற்பட்டாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் படப்பிடிப்பை கூடிய விரைவில் முடிக்க வேண்டும் என்ற நோக்கில் அனைவரும் செயல்பட்டு வருகிறார்கள்.
மேலும் இந்த படத்தின் ப்ரோமோவை பார்த்த ரசிகர்களுக்கு இது LCU வாக இருக்கலாம் என்று கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். ஆனால் லோகேஷ் இதற்கு பதில் அளிக்கும் விதமாக இது LUC டைப் கிடையாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.
இதனை தொடர்ந்து இந்த படத்திற்கான அப்டேட் ஏதாவது வரும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு காஷ்மீரில் இருந்து லோகேஷ் ஒரு புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டு இருக்கிறார். அது இணையதளத்தில் அனல் பறக்கும் புகைப்படமாக வெளியாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் எங்களுக்கு இந்த புகைப்படம் ஒரு வாரத்துக்கு போதுமே என்று சந்தோஷத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
காஷ்மீரில் இருந்து லோகேஷ் வெளியிட்ட அனல் பறக்கும் புகைப்படம்

மேலும் இந்த புகைப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த அப்டேட்டுகள் லோகேஷ் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போலவே இப்படத்தை ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவிற்கு அமையும். லோகேஷ்க்கு கடந்த வருடம் விக்ரம் படத்திற்கு கிடைத்த வெற்றியைப் போலவே இந்த வருடமும் அவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக கொடுப்பார் என்பது எந்தவித சந்தேகமும் இல்லை.