1. Home
  2. கோலிவுட்

முதலாளியாக புது அவதாரம் எடுக்கும் லோகேஷ்.. ரோலக்ஸ் ஸ்கார்பியோ உடன் வெளிவந்த அறிக்கை

முதலாளியாக புது அவதாரம் எடுக்கும் லோகேஷ்.. ரோலக்ஸ் ஸ்கார்பியோ உடன் வெளிவந்த அறிக்கை

Lokesh Kanagaraj : லோகேஷ் கனகராஜ் மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆன நிலையில் குறுகிய காலத்திலேயே டாப் நடிகர்களின் படங்களை இயக்கும் வாய்ப்பை பெற்றார். விஜய்யுடன் மாஸ்டர், லியோ, கமலுடன் விக்ரம் மற்றும் கார்த்தியுடன் கைதி ஆகிய படங்களில் லோகேஷ் பணியாற்றி இருக்கிறார்.

அடுத்ததாக ரஜினியுடன் இணைந்து தலைவர் 171 படத்தில் லோகேஷ் பணியாற்ற இருக்கிறார். இந்த சூழலில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் திடீரென ஒரு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதுவரை ஐந்து படங்களை இயக்கிய லோகேஷ் வசூல் ரீதியாக அனைத்திலுமே வெற்றி கண்டு விட்டார்.

இப்போது “G Squad” என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். மேலும் இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் முதல் சில படங்களை தன்னுடைய நெருங்கிய நண்பர்கள் மற்றும் அசிஸ்டன்ட் இயக்குனர்களை வைத்து எடுக்க இருக்கிறார். இந்த நிறுவனத்திற்கு எல்லோரும் ஆதரவு தர வேண்டும் என்றும் லோகேஷ் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் G Squad லோகோவில் ரோலக்ஸ் ஸ்கார்பியோ போல் டிசைன் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கழுத்தில் இதே போன்ற லோகோ தான் இடம் பெற்றிருந்தது. இந்நிலையில் மிக விரைவில் இந்த படத்தின் முதல் தயாரிப்பு படம் பற்றிய அறிவிப்பு வெளியாக இருக்கிறது.

லோகேஷ் தயாரிப்பாளராக புது அவதாரம் எடுத்துள்ள நிலையில் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். கண்டிப்பாக இதிலும் லோகேஷ்க்கு வெற்றி மாலை கிடைக்கும் என்பதில் எள் அளவும் சந்தேகம் இல்லை.

தயாரிப்பாளராக புது அவதாரம் எடுத்துள்ள லோகேஷ்

முதலாளியாக புது அவதாரம் எடுக்கும் லோகேஷ்.. ரோலக்ஸ் ஸ்கார்பியோ உடன் வெளிவந்த அறிக்கை
Lokesh-Ganagaraj
Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.