1. Home
  2. கோலிவுட்

ராஜமவுலியை ஒரே சீனில் மிரட்டி விட்ட லோகேஷ்.. கமல் முன்னாடி நடந்த சுவாரசியமான சம்பவம்

ராஜமவுலியை ஒரே சீனில் மிரட்டி விட்ட லோகேஷ்.. கமல் முன்னாடி நடந்த சுவாரசியமான சம்பவம்
ராஜமௌலி, கமல், லோகேஷ் கனகராஜ் இணைந்து கொடுத்த சமீபத்திய பேட்டியில் பல சுவாரசியமான தகவல்களை வெளிப்படுத்தி உள்ளனர்.

பிரம்மாண்ட படங்களை கொடுப்பதன் மூலம் இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் ராஜமௌலி, தற்போது தமிழ் சினிமாவின் அடையாளமாக பார்க்கப்படும் லோகேஷ் கனகராஜ் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு சீனை வைத்து பேட்டி ஒன்றில் பெருமையாக பேசி இருக்கிறார்.

அதிலும் கமல் முன்னாடி லோகேஷ் நடித்த சுவாரசியமான சம்பவத்தை பற்றியும் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் பட்டையைக் கிளப்பிய விக்ரம் படம் உலக அளவில் 500 கோடியை வாரி குவித்தது.

அதுமட்டுமின்றி 60 ஆண்டுகள் சினிமாவில் கிடைக்காத பெருமையும் கமலுக்கு இந்த படத்தின் மூலம் கிடைத்தது. அந்த அளவிற்கு தன்னுடைய மிரட்டலான நடிப்பை கமல் வெளிப்படுத்தியுள்ளார். அதிலும் இந்த படத்தில் இடம்பெற்ற சீனை குறிப்பிட்டு ராஜமவுலி லோகேஷை குறித்து வியந்து பேசியிருக்கிறார்.

விக்ரம் படத்தில் இடம் பெற்றிருந்த ஒரு ஷார்ட் ராஜமவுலிக்கு லோகேஷை கண் முன் நிறுத்தியதாம். விக்ரம் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் ரோலக்ஸ் கூட்டாளிகளுடன் பேசிக் கொண்டிருக்கும்போது, அந்த கும்பலில் விக்ரம் இருப்பார். கடைசியில் கூட்டம் எல்லாம் கலைந்து போகும்போது விக்ரம் வாயில் சுவிங்கத்தை மென்று கொண்டு கண்ணாடி அணிந்தபடி ஒரு லுக்கு விடுவார்.

அந்தக் காட்சியில் கமலுக்கு பதில் ராஜமௌலிக்கு லோகேஷின் முகம் தான் தெரிந்ததாம். இதைப் பற்றி ராஜமௌலியே லோகேஷிடம் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக தெரிவித்தார். அதே இடத்தில் இருந்த கமல், பல இடங்களில் தனக்கு வாயில் இருக்கும் சுவிங்கம் மறந்து விட்டேன். ஆனால் அந்த சமயத்தில் லோகேஷ் தான் எப்படி சுவிங்கத்தை மென்று கொண்டே ரியாக்சன் கொடுக்க வேண்டும் என்பதையும் கற்பித்தாராம்.

இவ்வாறு திரையுலகில் தற்போது ஜாம்பவான்களாக இருக்கும் லோகேஷ் கனகராஜ், ராஜமௌலி, கமல் மூவரும் அளித்த பேட்டியில் பல சுவாரசியமான விஷயத்தை தெரிவித்துள்ளனர். அதிலும் உலக நாயகன் கமலுக்கே லோகேஷ் நடிக்க கற்றுக் கொடுத்த விஷயம் ரசிகர்களின் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.