தேடிப் போய் வாய்ப்பு கொடுத்த லோகேஷ்.. விஜய்யுடன் ஒரு சம்பவம் இருக்கு, சஸ்பென்சை உடைத்த விஷால்

விஜயின் வாரிசு படம் பொங்கலுக்கு ரிலீசாகுவதை தொடர்ந்து, இந்தப் படத்திற்குப் பிறகு தளபதி 67 படத்தில் விஜய், லோகேஷ் கனகராஜ்  உடன் மாஸ்டர் படத்திற்குப் பிறகு 2ம் முறையாக இணைகிறார். தற்போது அந்தப் படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தளபதி 67 படத்தில் விஜய் மும்பையை சேர்ந்த கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிப்பதால், இந்தப் படத்திற்கு இவருக்கு இதுவரை 6 வில்லன்கள் ஒப்பந்தமாகியுள்ளனர். இவர்கள் பத்தாது என்று விஷாலையும் விஜய்க்கு ஒரு வில்லனாக்க வேண்டும் என, அவர் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று லோகேஷ் வழியன போய் வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்.

ஆனால் தளபதி 67 படத்தில் ஏற்கனவே பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், மலையாள நடிகர் நிவின் பாலி, மன்சூர் அலிகான், இயக்குனர் கௌதம் மேனன், மிஸ்கின் உள்ளிட்டோர் வில்லனாக நடிப்பதாக பெயர்கள் அடிபட்டன. தற்போது விஷால் தளபதி 67 படத்தில் விஜய்யுடன் நடிக்கவில்லை என்று சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் உறுதியாக தெரிவித்து இருக்கிறார்.

ஏனென்றால் தொடர்ந்து பல படங்களில் நடிக்க உள்ளதால் கால்ஷீட் பிரச்சினை காரணமாக லோகேஷ் தன்னிடம் வந்து கேட்டபோது அந்தப் படத்தில் நடிக்க முடியாது என சொல்லிவிட்டாராம். இதனால் விஜய்யுடன் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இருப்பினும் விஜய்யுடன் நடிக்க முடியவில்லை என்றாலும் அவரை வைத்து ஒரு திரைப்படம் இயக்கும் எண்ணத்தில் இருக்கிறேன்.

முதலில் துப்பறிவாளன் 2-ம் பாகத்தை எடுத்து முடித்துவிட்டு பிறகு நடிகராக இல்லாமல் வெறும் டைரக்டராக விஜய்யிடம் கதை சொல்லி ஓகே வாங்கிவிட்டு, விஜய் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி விடுவேன். இது என்னுடைய நீண்ட நாள் ஆசை. ஆகையால் 2024 ஆம் ஆண்டு இந்த படத்திற்கான பணிகளை துவங்க விரும்புகிறேன். அதனால் நிச்சயம் விஜய் உடன் ஒரு சம்பவம் இருக்கிறது என்று விஷால் தற்போது உடைத்து பேசியிருக்கிறார்.

ஆனால் லோகேஷ் யுனிவர்ஸ் கான்செப்டில் மல்டி ஸ்டார்களின் படம் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் விஷாலை விஜய்க்கு வில்லன் ஆக்குவதாக அவர் எடுத்த முயற்சி செல்லுபடியாகாமல் போனது. ஒருவேளை விஷால் மட்டும் ஒத்துக் கொண்டால் நிச்சயம் விஜய் சேதுபதி, சூர்யா போல அவருடைய சினிமா கெரியலிலும் மறக்க முடியாத அனுபவத்தை தந்திருக்கும்.