கதை நல்லா இல்லை என ஜகா வாங்கிய மாதவன்.. அல்லோலப்படும் தனுஷ் பட சூப்பர் ஹிட் இயக்குனர்

90ஸ் காலகட்டத்தில் சாக்லேட் பாயாக வலம் வந்தவர் மாதவன். இவர் நடித்த காதல் மற்றும் ரொமான்டிக் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார். அப்படிப்பட்ட இவர் தமிழில் படங்கள் நடித்தது நீண்ட நாட்கள் ஆகிவிட்டது என்றே சொல்லலாம். இவர் கடைசியாக நடித்த படம் ராக்கெட்ரி.

கடந்த வருடம் இவர் இயக்கி நடித்து வெளிவந்த திரைப்படம். இத்திரைப்படம் இந்திய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் முன்னாள் விஞ்ஞானி விண்வெளி பொறியாளர் நம்பி நாராயணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட திரைப்படமாகும். இப்படத்தில் சிம்ரன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்திற்குப் பிறகு இவர் எந்தப் படங்களிலும் நடிக்கவில்லை.

அதே நேரத்தில் இயக்குனர் மித்ரன், தனுஷ் வைத்து திருச்சிற்றம்பலம் படத்தை சூப்பர் ஹிட் படமாக கொடுத்தார். பின்னர் இவர் இன்னொரு கதையை தயார் செய்து அதில் மாதவனை நடிக்க வைப்பதற்காக அவரிடம் போய் கதை சொல்லி இருக்கிறார். ஆனால் அவர் அந்த கதையை கேட்டுவிட்டு எனக்கு இந்த கதை பிடிக்கவில்லை மற்றும் இந்த கதை நல்லாவும் இல்லை என்று பின் வாங்கிட்டார்.

இதனை அடுத்து மாதவன் மறுபடியும் மித்திரனை கூப்பிட்டு பேசி இருக்கிறார். அதாவது அந்த கதைக்கு பதிலாக ஜெகன்மோகன் நாவல் ஒன்று இருக்கிறது. நாம் அதிலிருந்து கதையை எடுக்கலாம் என்று கூறியிருக்கிறார். இதனால் இயக்குனர் மித்ரன் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து வருகிறார்.

பொதுவாகவே இயக்குனர்களிடமிருந்து தான் நடிகர்கள் கதையே கேட்டு நடித்துக் கொடுப்பார்கள். ஆனால் இப்பொழுது அந்த காலம் போயி நடிகர்கள் கதையை சொல்லி அதை இயக்கும் நிலைமை ஆகிவிட்டது என்றே சொல்லலாம். ஆனால் இயக்குனர் மித்ரன் கடைசியாக கொடுத்த திருச்சிற்றம்பலம் படம் பெரிய அளவில் அவருக்கு ஹிட் படமாக ஆனது.

அதனால் கண்டிப்பாக அடுத்த படத்திலும் வெற்றி பெறுவதற்காக முழு முயற்சியுடன் ஒரு கதையை ரெடி பண்ணி தான் வைத்திருப்பார். அதையே இவர் ஏற்று நடிப்பதற்கு ஓகே பண்ணி இருந்தா மாதவனுக்கும் சினிமா கேரியரில் ஒரு வெற்றி படமாக தான் அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் அதையெல்லாம் தவிர்த்து மாதவன் இப்படி செய்வது எப்படி சாத்தியமாகும் என்பது தெரியவில்லை.