பெரும் குழப்பத்தில் மணிரத்தினம்.. ரஜினி கொடுக்கும் அந்த முதல் வாய்ப்பு யாருக்கு

ரஜினி தற்போது மீண்டும் பழைய எனர்ஜியுடன் தன்னுடைய அடுத்த அடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார். இப்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.

ஜெயிலர் படத்தை தொடர்ந்து லைக்கா தயாரிப்பில் இளம் இயக்குனரான சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ரஜினி நடிக்கப் போகிறார். இதற்கான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாக உள்ளது. தலைவர் 170 படத்தை தொடர்ந்து ரஜினி எந்த படத்தில் நடிக்க போகிறார் என்ற குழப்பம் எழுந்துள்ளது.

அதாவது மணிரத்தினம் தளபதி ஸ்டைலில் ரஜினியிடம் ஒரு கதை சொல்லி ஓகே வாங்கி உள்ளார். ஆனால் தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியான பிறகு தான் அடுத்த படத்தில் மணிரத்தினம் கமிட் ஆக உள்ளார். பொன்னியின் செல்வன் படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தான் வெளியாக உள்ளது.

இதனால் அடுத்ததாக மணிரத்தினம் படத்தில் ரஜினி நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் ரஜினியை வைத்து ஒரு படத்தை இயக்கப் போகிறார். இந்த படம் சிவாஜி 2 அல்லது எந்திரன் 3 இதுவும் இல்லை என்றால் சரித்திர கதையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

ஏற்கனவே ரஜினிக்கு பிளாக்பஸ்டர் படங்களை ஷங்கர் கொடுத்துள்ளார். மேலும் ஷங்கர் தற்போது தெலுங்கில் ராம்சரணை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். அதேபோல் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தையும் ஷங்கர் தான் இயக்கி வருகிறார்.

இந்த இரு படங்களின் படப்பிடிப்பும் விரைவில் முடிய உள்ளது. இதனால் மணிரத்தினம் படத்திற்கு முன்னதாகவே ஷங்கர் படத்தில் ரஜினி நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு தான் மணிரத்தினத்துடன் ரஜினி மாஸ் கூட்டணி போட உள்ளார்.