Manirathinam Movie Mass Hero: எப்பேர்ப்பட்ட நடிகராக இருந்தாலும் மணிரத்தினம் படத்தில் நடித்தால் அவர்களுக்கு சினிமாவில் ஒரு பிரகாசமான கேரியர் அமைந்துவிடும். அந்த வகையில் ரஜினி, கமல் மற்றும் பல முன்னணி நடிகர்கள் ஜெயித்துக் காட்டியிருக்கிறார்கள். ஆனால் இந்த ஒரு நடிகரின் கேரியர் மட்டும் தள்ளாடி கொண்டு இருக்கிறது.
ஆரம்பத்தில் இவரும் பல ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகர்களில் ஒருவராக அவருக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டவர் தான். ஆனால் போகப் போக சரியாக படத்தின் கதையை தேர்ந்தெடுக்க தெரியாமலும், இவருடைய மாமியார் பேச்சை கேட்டுக் கொண்டும் பல வாய்ப்புகளை கோட்டை விட்டு வருகிறார்.
அந்த வகையில் கிட்டத்தட்ட நான்கு வருடங்களாகவே வெற்றியை ருசிக்க முடியாமல் அவதிப்பட்டு இருக்கிறார். இன்னும் சொல்ல போனால் சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான படமும் ரசிகர்களிடமிருந்து மொக்கையான விமர்சனங்களை பெற்று படத்தை கழுவி கழுவி ஊற்றும் நிலைமைக்கு போய்விட்டது.
அப்படி தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நடிகர் யார் என்றால் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த அருள்மொழிவர்மன் கேரக்டரை தூக்கி சாப்பிட்ட ஜெயம் ரவி தான். இந்தப் படத்தில் என்னவோ இவருக்கு மாஸான வரவேற்பு தான். ஆனால் இந்தப் படத்தின் ஹீரோவாக தன்னிச்சையாக வெற்றி பெறவில்லை. கூட்டத்தோடு கூட்டமாக கோவிந்தா போட்டதால் கிடைத்த வரவேற்பு தான் இவருக்கு.
அதாவது 2016 ஆம் ஆண்டு பிரதீப் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த கோமாளி படம் தான் இவருக்கு சொல்லும் படியான மாபெரும் வெற்றி. அதற்கு அடுத்தடுத்த படங்கள் தோல்வியை கொடுத்து மோசமாக அமைந்தது. இன்னும் சொல்லப்போனால் சமீபத்தில் வெளிவந்த இறைவன் படமும் ஏமாற்றத்தை கொடுத்தது. இதைத் தாண்டி இன்னும் அடுத்தடுத்த படங்கள் கைவசம் இருந்தாலும், அந்தப் படங்கள் எந்த அளவிற்கு இருக்கும் என்பது சந்தேகமாக தான் இருக்கிறது.
அதற்கு காரணம் யாராவது ஒரு இயக்குனர் கதை சொல்ல வந்தால் அதை மாமியார் தான் தயாரிப்பார் என்று சொல்கிறாராம். அதுவும் குறைந்த பட்ஜெட்டில் தான் இருக்குமாம். இந்த ஒரு விஷயத்தினால் எந்த ஒரு இயக்குனரும் இவரை தேடி போவதில்லை. இப்படியே தொடர்ந்து போனால் ஜெயம் ரவி கூடிய விரைவில் சினிமாவில் இருந்து பீல்ட் அவுட் ஆகும் நிலைமை வந்து விடும் என்று சினிமா வட்டாரங்கள் பேசிக் கொண்டு வருகிறார்கள்.