என்ன பெரிய LCU, மௌன ராகம், அஞ்சலி கனெக்சன் தெரியுமா.? அப்பவே ட்ரெண்ட்டை பிடித்த மணிரத்னம்

Mani Rathnam: கைதி படத்தில் ஆரம்பித்து லியோ வரை தொடர்புபடுத்தி LCU என பெயர் வைத்தார் லோகேஷ். அதற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பும் இருக்கிறது.

ஆனால் 90 காலகட்டத்திலேயே மணிரத்னம் இப்படி ஒரு டிரெண்டை பிடித்தது பலருக்கும் தெரிய வாய்ப்பு இல்லை. ஆம் சும்மாவா சொன்னார்கள் அவரை ட்ரெண்டிங் இயக்குனர் என்று.

அவருடைய மௌன ராகம், அஞ்சலி இரு படங்களும் ஒரே தொடர்ச்சியாக தான் வர இருந்தது. ஆனால் அந்த முயற்சி தடைபடுவதற்கு மோகன் தான் முக்கிய காரணம்.

அப்பவே ட்ரெண்ட்டை பிடித்த மணிரத்னம்

1986ல் மௌன ராகம் வெளிவந்து பெரும் வெற்றி பெற்றது. அதன் பிறகு மணிரத்னம் மோகன் ரேவதிக்கு மூன்று குழந்தைகள் பிறப்பது போலவும் ஒரு குழந்தை ஸ்பெஷல் சைல்ட் எனவும் கதை எழுதி இருக்கிறார்.

ஆனால் மோகனுக்கு இதில் நடிக்க உடன்பாடு இல்லை. ஏனென்றால் படத்தில் ஸ்பெஷல் குழந்தையாக வரும் ஷாமிலி தனி அறையில் இருப்பது போல் காட்டப்பட்டு இருக்கும்.

அது மோகனுக்கு பிடிக்கவில்லை. ஸ்பெஷல் சைல்ட் பெற்றவர்களுடன் தானே இருக்க வேண்டும் என கூறியிருக்கிறார். மணிரத்னம் அவர் பணியில் யோசித்து இருக்கிறார்.

இதனால் மோகன் நடிக்க மறுத்துள்ளார். அதன் பிறகு ரகுவரன் கமிட் செய்யப்பட்டு படம் மௌனராகத்தோடு தொடர்பில்லாமல் வெளிவந்தது.

இதை சுகாசினி ஒரு பேட்டியில் மோகனிடம் வெளிப்படையாக கேட்டார். அவரும் தன் தரப்பு விளக்கத்தை கொடுத்தார். இருந்தாலும் இது நடந்திருந்தால் நிச்சயம் புதுமையாக இருந்திருக்கும்.

Leave a Comment