1. Home
  2. கோலிவுட்

இந்தப் பெரும்புள்ளிகள் எல்லாம் மணிரத்தினத்தின் உதவியாளர்களா.? தக்கலைஃப் படத்தில் நடித்த ரகுமானின் வாரிசு

இந்தப் பெரும்புள்ளிகள் எல்லாம் மணிரத்தினத்தின் உதவியாளர்களா.? தக்கலைஃப் படத்தில் நடித்த ரகுமானின் வாரிசு

தக்லைஃப் படத்தில் மணிரத்னத்துடன் 14 அசிஸ்டன்ட் இயக்குனர்கள் வேலை செய்துள்ளனர். பெரும் புள்ளிகளின் வாரிசுகள் எல்லாம் சிபாரிசோடு மணிரத்தினத்தின் படத்தில் தான் தொழிலை கற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே நடிகர் சித்தார்த், கார்த்தி போன்றவர்கள் இவரிடம் வேலை செய்தவர்கள் தான்.

அசோசியேட் டைரக்டராக இவரிடம் வேலை செய்த பல பேர் இன்று தங்களுடைய சொந்த படத்தை இயக்கி உள்ளனர். துரோகி, கண்ட நாள் முதல் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர்கள் எல்லோரும் மனிதத்தனத்திடம் வேலை செய்தவர்கள் தான்.

பல நடிகர், நடிகைகள் தங்களுடைய வாரிசை இப்பொழுது மணிரத்தினத்திடம் அசிஸ்டன்ட் டைரக்டராக சேர்த்து விட்டுள்ளனர். குறிப்பாக இயக்குனர் சுந்தர் சி மற்றும் குஷ்பூ தம்பதியினர் தங்களுடைய மூத்த மகளை அவரிடம் அசோசியேட்டாக வேலை செய்ய அனுப்பியுள்ளனர்.

சூட்டிங் ஸ்பாட்டில் கிரியேட்டிவ்வாக யோசிப்பவர்களுக்கு மணிரத்தினம் முக்கியத்துவம் கொடுப்பாராம். அப்படி நன்றாக யோசித்து காட்சிகளை கட்டமைக்கும் மணிரத்தினத்திடம் வேலை செய்தால் நமது வாரிசுகளின் எதிர்காலம் நன்றாக இருக்கும் என பெரிய நடிகர்கள் எல்லோரும் அவரிடமே வாரிசு செய்து வேலைக்கு அனுப்பி வைக்கின்றனர்.

குஷ்பூ மகளை தவிர, நடிகர் ரகுமானின் மகளும், லப்பர் பந்து ஹீரோயின் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி போன்றவர்களும் தக்லைஃப் படத்தில் அசிஸ்டன்டாக வேலை செய்துள்ளனர். இதில் நடிகர் ரகுமானின் மகள் அலிசா, நாசரின் மகள் சாந்தி கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடித்திருந்தார்.

Cinemapettai Team
Thenmozhi

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.