நாலா பக்கமும் மணிரத்தினத்தின் தக்லைஃப் படம் தான் படாதபாடு பட்டு கொண்டிருக்கிறது. அரசியல் விமர்சகர்கள் எல்லோரும் இப்பொழுது இந்த படத்தை வைத்து அரசியல் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். இந்த படத்திற்கு எதிராக நெகட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள்.
இப்படி ஒரு பக்கம் கதை நகர்த்து கொண்டு போகையில் மறுபக்கம் இந்த படம் சூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே மணிரத்தினம் அடுத்து சிம்புவை வைத்து ஒரு காதல் படம் பண்ணும் யோசனையில் இருந்தார். ஆனால் அதற்கும் இப்பொழுது ஆபத்து வந்துவிட்டது.
மீண்டும் சிம்புவை வைத்து படம் எடுத்தால் அந்தக் கூட்டணிக்கு எதிர்பார்ப்பு இருக்குமா என்பதில் சந்தேகம் எழுந்து விட்டது அதனால் அந்த இவர்கள் மறுபடியும் நினைவார்களா என்பது கேள்விக்குறியாகிவிட்டது. படம் ரிலீசான கையோடு சிம்பு துபாய் பக்கம் போய் ரிலாக்ஸ் செய்து வருகிறார்.
தக்லைஃப் படம் ரிலீசுக்கு முன்பு சிம்பு மற்றும் மணிரத்தினத்தின் அடுத்த கூட்டணிக்கு ஏகபோக வரவேற்பு இருந்தது. எங்கே சென்றாலும் அவர்களின் அடுத்த ப்ராஜெக்ட் பற்றிய பேச்சுக்கள் தான் அடிபட்டது. ஆனால் தக்லைஃப் ரிலீசான பின்பு இது ஒரே நாளில் தலைகீழாக மாறிவிட்டது.
இந்த படம் ஷூட்டிங் நேரத்திலேயே மணிரத்தினம் ரஜினியுடன் அடிக்கடி பேசி வந்துள்ளார். இதனால் அடுத்து ரஜினியுடன் மீண்டும் ஒரு கூட்டணி அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்பொழுது இந்த படம் ரிலீசுக்கு பின்பு அதுவும் கேள்விக்குறியாகிவிட்டது. மணிரத்தினத்துக்கு வாய்ப்பு கொடுப்பாரா என்பது தெரியவில்லை.