அதை பற்றி பேச கமலுக்கு தகுதியே இல்ல.. பரபரப்பை கிளப்பிய மன்சூர் அலிகான்!

நடிகர் மன்சூர் அலிகான் பேட்டி ஒன்றில் உலக நாயகன் கமலஹாசனையும், அவருடைய மக்கள் நீதி மையத்தையும் பகிரங்கமாக சாடியுள்ளார். மேலும் கமலுக்கு முதல்வராக எந்த தகுதியும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

கமலஹாசன் கடந்த 2018 ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்னும் அரசியல் கட்சியை தொடங்கினார். ஆறு கைகள் இணைந்தால் போல் இருப்பது அவருடைய கட்சி கொடி, டார்ச் லைட் அவருடைய கட்சி சின்னம்.

அதே போன்று நடிகர் மன்சூர் அலி கான் கூட, தான் இருந்த நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி தமிழ் தேசிய புலிகள் என்னும் கட்சியை தொடங்கினார். மன்சூர் அலி கானிடம் கமல் அரசியலை பற்றி கேட்டபோது பல ஊழல்வாதிகள் நிறைந்துள்ள கட்சியின் தலைவருக்கு ஊழலை பற்றி பேச தகுதியில்லை என்று கூறினார்.

கமலின் படங்களை தயாரித்து பல தயாரிப்பாளர்கள் இன்றும் கடனில் கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றனர். சினிமாவையே காப்பாற்ற முடியாத கமல் நாட்டை எப்படி காப்பாற்றுவார் என கேள்வி எழுப்பியுள்ளார்.

கமல் என்னதான் பெரியார் கொள்கையை பின்பற்றினாலும் அவர் பார்ப்பனர் தான் என்றும், நாட்டின் மிகப்பெரிய பதவிகளில் எல்லாம் பார்ப்பனர்கள் தான் இருக்கிறார்கள், இனி கமலையும் முதல்வர் ஆக்க கூடாது, தமிழகத்தை தமிழர் தான் ஆளவேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.

மேலும் மத்திய அரசின் பல மோசமான திட்டங்களை கமல் பாராட்டி பேசியுள்ளதாக மன்சூர் குற்றம் சாட்டியுள்ளார். பிரச்சனைகளுக்கு வீதியில் வந்து போராடாமல் ட்வீட் போட்டு கொண்டிருக்கும் கமல் ட்விட்டரிலேயே ஆட்சி செய்யட்டும் என ஆதங்கமாக பேசியுள்ளார்.