14 ஹீரோக்கள், 30 தயாரிப்பாளர்கள் நிராகரித்த சூப்பர் ஹிட் படம்.. அசுரன் பட நடிகருக்கு நேர்ந்த கொடுமை

சமீபகாலமாக தமிழ் சினிமா எதை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை. தற்போது பல நல்ல கதைகளும் நிராகரிக்கப்படும் அவலம் நடந்து கொண்டிருக்கிறது. இதனால் பல இயக்குனர்கள் தங்களின் படைப்புகளை இயக்கும் வழி தெரியாமல் தவித்து வருகின்றனர்.

அப்படி ஒரு சிக்கலில் கடந்த 23 வருடங்களாக தவித்து வந்தவர் தான் இயக்குனர் தமிழ். இவர் தன்னுடைய கதையை கிட்டத்தட்ட 14 ஹீரோக்கள், 30 தயாரிப்பாளர்களிடம் கூறியிருக்கிறார். ஆனால் அவர்கள் அத்தனை பேரும் அந்த கதையை நிராகரித்து விட்டனர்.

அவர்கள் யார் என்பதை இயக்குநர் இப்போது வரை வெளியே சொல்லவில்லை. ஆனால் அவர் இயக்கிய அந்த திரைப்படம் தற்போது வெளிவந்து சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கிறது. விக்ரம் பிரபுவின் நடிப்பில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவரும் டானாக்காரன் திரைப்படம் தான் அது.

அஞ்சலி நாயர், லால், எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த திரைப்படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப் பட்டதாகும். மேலும் போலீஸ் பயிற்சி மையத்தில் நடக்கும் சம்பவங்கள் மிகவும் நேர்த்தியாக இருப்பதாக இப்படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.

தற்போது இந்தப் படத்தை மிஸ் செய்து விட்டோமே என்று அந்த தயாரிப்பாளர்களும் ஹீரோக்களும் வருத்தப்பட்டு வருகிறார்களாம். அந்த அளவுக்கு இந்த படம் ரசிகர்களை ஈர்த்து வருகிறது. இந்த படத்தின் இயக்குனர் தமிழ் வேறு யாருமல்ல அசுரன் படத்தில் கரியன் என்ற கேரக்டரில் நடித்தவர்தான்.

அதுமட்டுமல்லாமல் இவர் ஜெய்பீம் திரைப்படத்திலும் போலீசாக நடித்து இருப்பார். இவருடைய பல வருட கனவு தற்போது நனவாகி இருக்கிறது. அந்த வகையில் அறிமுகப் படத்திலேயே அனைவரும் ரசிக்கும்படியான கதையை கொடுத்த இவருக்கு தற்போது வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.