உதயநிதி கதாநாயகனாக சினிமாவிற்கு எண்டு கார்டு போடும் கடைசி படம் மாமன்னன். இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். அத்துடன் வடிவேலும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படம் அரசியல் சம்பந்தப்பட்ட படமாகவும் இருக்கும் அதே நேரத்தில் ஒரு வித்தியாசமான என்டர்டைன்மென்ட் படமாகவும் அமையப்போகிறது.
அத்துடன் உதயநிதிக்கு மாமன்னனின் கதை ஏதோ ஒரு வகையில் மிகவும் தாக்கி உள்ளதாகவும், அதனால இப்படத்தின் மீது அதிக பிடிப்பு ஏற்பட்டு விட்டதாக கூறியிருக்கிறார். மேலும் இதில் இவர் நடித்ததற்கு பெருமைப்படும் அளவிற்கு கதை அமைந்திருக்கிறது. அதனால் கண்டிப்பாக எனக்கு மிகப் பெரிய வெற்றியை கொடுக்கும் என்று உதயநிதி நம்பிக்கையுடன் இருக்கிறார்.
அதனாலேயே படத்தின் இயக்குனராக இருக்கும் மாரி செல்வராஜ்க்கு ஏதாவது ஒரு நல்லது செய்யணும் என்று இருந்திருக்கிறார். அதே நேரத்தில் சென்னை அம்பத்தூர் பக்கத்தில் உள்ள பாடியில் புதிய வீடு ஒன்றை மாரி செல்வராஜ் கட்டி இருக்கிறார். அந்த வீட்டிற்கு இவரை சந்திப்பதற்காக உதயநிதி போய் இருக்கிறார்.
அப்பொழுது இவர் போன அந்த ஏரியாவில் ரோடு இல்லாமல் மோசமான நிலையில் இருந்திருக்கிறது. இதை பார்த்த உதயநிதி உடனே அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரை அடித்து விட்டார். ஒரு வாரத்துக்குள்ளேயே புது ரோடு போட்டு மாரி செல்வராஜுக்கு வேணும்கிற வசதியும் செய்து கொடுத்திருக்கிறார்.
இப்படி உதயநிதி செய்தது மாரி செல்வராஜுக்கு மட்டுமில்லாமல் அந்த ஏரியா மக்கள் அனைவரும் பயன்படும்படி ஒரே கல்லில் ரெண்டு மாங்கா லாபத்தை பார்த்திருக்கிறார். புது ரோடு அமைந்ததால் அங்கு இருக்கும் மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். இதனால் அங்கே இருக்கும் மக்கள் உதயநிதியை கடவுளாக பார்க்கிறார்களோ இல்லையோ மாரி செல்வராஜை வரம் தந்த கடவுளாக பாவித்து வருகிறார்கள்.
அது மட்டும் இல்லாமல் அந்த ஏரியாவில் இருக்கும் இன்னும் அனைத்து பிரச்சனைகள் முதற்கொண்டு மாரி செல்வராஜிடம் மக்கள் வீடு தேடி சென்று கூறி வருகிறார்கள். இதனால் கடவுளை இவர் பக்கம் இருக்க இனி பூசாரிக்கு, அங்கு இருக்கும் மக்களால் தினமும் அபிஷேகம் தான். ஏனென்றால் இவர் மூலமாக உதயநிதியால் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும் என்பதால். எது எப்படியோ நல்லது நடந்தால் சரிதான்.