வசூல் மழையில் தேவரா, மெய்யழகன்.. முதல் நாள் கலெக்சன் ரிப்போர்ட்

Meiyazhagan, Devara Collection : நேற்று அக்டோபர் 27 வெள்ளிக்கிழமை பல படங்கள் வெளியானது. அதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம் ஜூனியர் என்டிஆரின் தேவரா மற்றும் கார்த்தி, அரவிந்த்சாமி கூட்டணியில் வெளியான மெய்யழகன் படங்கள் தான். இந்த படத்திற்கான வசூல் விபரங்களை பார்க்கலாம்.

ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர், சைஃப் அலி கான் ஆகியோர் நடிப்பில் அனிருத் இசையில் கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகி இருந்தது தேவரா. ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்த படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி இருந்தது.

இந்த படத்தின் டிரைலரில் ஏகப்பட்ட பில்டப் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் படம் எப்படி இருக்கும் என்ற ஆர்வத்தை தூண்டி இருந்தது. மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் கலவையான விமர்சனங்களை தான் பெற்றது. மேலும் முதல் நாளில் நூறு கோடிக்கு மேல் வசூல் செய்யும் என எதிர்பார்த்த நிலையில் 77 கோடி வசூல் செய்துள்ளது.

தேவரா மற்றும் மெய்யழகன் முதல் நாள் கலெக்சன்

தெலுங்கில் 68.6 கோடியும், இந்தியில் 7 கோடியும், தமிழில் 80 லட்சம், கன்னடத்தில் 30 லட்சம் மற்றும் மலையாளத்தில் 30 லட்சம் வசூலை தேவரா படம் பெற்றது. அதேபோல் தமிழில் 96 படத்தை இயக்கிய பிரேம்குமார் இயக்கத்தில் மெய்யழகன் படம் வெளியாகி இருந்தது.

சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்த நிலையில் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. அதன்படி 33 கோடி பட்ஜெட்டில் உருவான மெய்யழகன் படம் முதல் நாளே மூன்று கோடியை தாண்டி வசூல் செய்திருக்கிறது.

மேலும் வார இறுதி நாட்கள் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை நாட்கள் என்பதால் அடுத்த வாரம் வசூல் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. குறைந்த பட்ஜெட்டில் இது போன்ற நல்ல படங்கள் ரசிகர்கள் பெருவாரியாக வரவேற்று வருகிறார்கள்.

சிக்ஸர் அடித்த கார்த்தி

Leave a Comment