Mgr In Alian Movie: பிரம்மாண்ட படம் என்றாலே அது சங்கருக்கு மட்டுமே கைவந்த கலையாக இருக்கும். அதற்கு காரணம் புதுப்புது டெக்னிக், பல தொழில்நுட்பங்களை பயன்படுத்தி எக்கச்சக்கமான பட்ஜெட்டுகளை வைத்து படத்தை எடுக்க கூடிய தைரியம் இவர் ஒருவருக்கு மட்டுமே இருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே.
அப்படிப்பட்ட இவரே 60 வருடத்திற்கு முன்பு எம்ஜிஆர் நடிப்பில் வெளிவந்த ஏலியன் படத்தை கை வைக்கவில்லை. அதற்கு காரணம் படத்தில் ஏகப்பட்ட விஷயங்களை தொழில் நுட்பத்துடன் செய்ய வேண்டியதற்கும். மேலும் அதிக அளவில் பட்ஜெட் எகிறும் என்பதற்காக சங்கர் அந்தப் பக்கமே போகவில்லை. ஆனால் மிகத் தைரியத்துடன் இயக்குனர் ரவிக்குமார் அதை செய்திருக்கிறார்.
அதாவது 1963ஆம் ஆண்டு எம்ஜிஆர் நடிப்பில் வெளிவந்த கலையரசி என்ற படத்தின் கதைதான் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் படம். முதன்முலாக ஏலியன் கதையில் வேற்றுக்கிரகவாசிகளாக நடித்து வெற்றி பெற்றவர் தான் எம்ஜிஆர். அப்பேர்ப்பட்ட படத்தின் கதையை தற்போது சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார்.
இப்படம் பல ஆண்டுகளாகவே கிடப்பில் போடப்பட்டு தற்போது தான் தூசி தட்டப்பட்டு பொங்கல் அன்று ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. மேலும் இப்படத்தின் டீசர் நேற்று வெளியானதில், சிவகார்த்திகேயன் தோற்றம் அதில் செய்யப்பட்டிருக்கும் கிராபிக்ஸ் மற்றும் கதை ரொம்பவே எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. அத்துடன் ஏஆர் ரகுமான் இசை, ராகுல் ப்ரீத் சிங்கின் நடிப்பு போன்ற அனைத்துமே இப்படத்திற்கு வலு சேர்த்து இருக்கிறது.
அந்த வகையில் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் ஏலியன் கதையாக இருப்பதால் குழந்தைகளை அதிகமாக கவரும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இந்நேரத்திற்கு டீசரை பார்த்த குழந்தைகள், இந்த படத்திற்கு கண்டிப்பாக போக வேண்டும் என்று வீட்டில் அடம் பிடிக்க தொடங்கி இருப்பார்கள்.அதே நேரத்தில் பொங்கல் பண்டிகைக்கு ரஜினிகாந்தின் லால் சலாம், வணங்கான், அரண்மனை 4 மற்றும் விடுதலை 2 என படையெடுத்து வருகிறது.
அதனால் இந்த படங்களை விட அயலான் படத்தின் கதை நன்றாக இருந்தால் மட்டுமே சிவகார்த்திகேயன் தொடர்ந்து மார்க்கெட்டை தக்க வைத்துக்கொள்ள முடியும். ஏனென்றால் இதற்கு முன் வெளிவந்த மாவீரன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தொடர்ந்து இந்தப் படமும் மக்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தால் சிவகார்த்திகேயன் கேரியர் சரிந்து விடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.