1. Home
  2. கோலிவுட்

தமிழ் புத்தாண்டுக்கு வசூல் வேட்டையாட வரும் 5 படங்கள்.. அஜித், விஜய்க்கு பயத்தை காட்டும் படம்

தமிழ் புத்தாண்டுக்கு வசூல் வேட்டையாட வரும் 5 படங்கள்.. அஜித், விஜய்க்கு பயத்தை காட்டும் படம்
தமிழ் புத்தாண்டுக்கு வெளிவர உள்ள பிரம்மாண்டமான 5 படங்கள்.

Ajith Vs Vijay Movie Clash for Tamil New Year 2024: பொங்கல் ரேஸ் ஒருபுறம் இருந்தாலும் தமிழ் புத்தாண்டை குறிவைக்கும் 5 படங்களை பற்றி பார்க்கலாம். முக்கியமாக பிரம்மாண்ட எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது சூர்யா-சிவா கூட்டணி. இதைத் தவிர அஜித், விஜய் நேரடியாக மோதப் போவது தற்போது உறுதியாகி உள்ளதால் கோலிவுட் வட்டாரம் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியன் 2: "வணக்கம் India. Indian is back" என்று கம் பேக் கொடுக்க வருகிறது இந்தியன்-2. பிரம்மாண்ட இயக்குனரின் படைப்பில் அனிருதீன் இசையில் சுபாஷ்கரண் தயாரிப்பில் கமல்,சித்தார்த்,எஸ் ஜே சூர்யா, காஜல் அகர்வால் பிரியா பவானிசங்கர்,பாபி சிம்கா,காளிதாஸ் ஜெயராம்,நெடுமுடிவேணு மனோபாலா மற்றும் டெல்லி கணேஷ் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். ஊழலுக்கு எதிரான படம் என்பது நாம் அனைவரும், அறிந்ததே. ஆனால் அதை நமது இந்தியன் தாத்தா இந்த காலத்திற்கு ஏற்றவாறு எப்படி களை எடுக்கிறார் என்பதை பல சுவாரசியங்களுடன் கூற வருகிறது.

தளபதி 68:  Digital DAG கான்செப்ட் உடன் களமிறங்கும் வெங்கட் பிரபு தனது ஆஸ்தான இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து தரமான என்டர்டைன்மென்ட் ஃபிலிம் ஆக தளபதி 68 ரெடி பண்ணி வருகிறார். இது சயின்ஸ் பிக்சன் படமா அல்லது மாநாடு மாதிரியான டைம் டிராவல் படமா என ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் சஸ்பென்சாக வைத்துள்ளார்.

அஜித்திற்கு "மங்காத்தா" மாதிரியாக விஜய்க்கு இப்படம் இருக்கும் என விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர். முக்கிய கதாபாத்திரங்களில் மீனாட்சிசவுத்ரி, பிரசாந்த், லைலா, சினேகா வைபவ், மோகன், ஜெயராம் மற்றும் பிரேம்ஜி அமரன் என முன்னணி நட்சத்திரங்களின் லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது. பல வருடங்களுக்குப் பின் பிரசாந்த் மற்றும் மோகன் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளனர் ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் இப்படத்தை தயாரிக்கின்றது.

விடாமுயற்சி: இருக்கு ஆனா இல்ல என்பதே கொஞ்சம் மாற்றி மகிழ் திருமேனி அவர்கள், "இது ஆக்சன் இல்ல ஆனா திரில்லர்", "புதிருக்குள் விடுகதை விடுகதைக்குள் மர்மம்" என அஜித்தின் விடாமுயற்சி பற்றி பல சஸ்பென்ஸ் களை பகிர்ந்து வருகின்றார் லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். திரிஷா, ரெஜினா, ஆக்சன் கிங் அர்ஜுன்  மற்றும் அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

கங்குவா: இந்திய திரை உலகமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் கங்குவா படம் 12 மொழிகளில் வெளியாக உள்ளது. அசாத்தியமானவற்றை சாத்தியமாக்கி பாகுபலி ராஜமவுலிக்கே டஃப் கொடுக்கும் வகையில் கங்குவாவை ரெடி பண்ணி வருகின்றார் நமது சிறுத்தை சிவா. ட்ரெய்லரிலே தமிழ் ரசிகர்களை  கூஸ் பம்ப் மொமெண்ட் ஏற்படுத்திய கங்குவா தமிழரின் வீரத்தை பறைசாற்றும் படமாக அமையும் என அனைத்து தரப்பு ரசிகர்களாலும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் இசை தேவி ஸ்ரீ பிரசாத். சூர்யா இப்படத்தில் ஆறு வேடங்களில் நடிக்கின்றார். திஷா பதானி, பாபி தியோல், நடராஜ் சுப்பிரமணியம் KS ரவிக்குமார் யோகி பாபு, ரெட்இன் கிங்ஸ்லி கோவை சரளா, ஆனந்தராஜ் என பலரும் இப்படத்தில் நடிக்கின்றனர்.

தலைவர் 170 : தலைவரே சொல்லிட்டாரு தலைவர் 170-கருத்துள்ள பிரம்மாண்டமான பொழுதுபோக்கு திரைப்படம் என்று. ஞானவேல் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் இதை தயாரித்துவருகின்றது.  அனிருத்  இப்படத்திற்கு இசையமைக்கின்றார். படத்தில் தலைவருடன் இணைந்து துஷாரா விஜயன்,மஞ்சு வாரியர், ரித்திகா சிங், அமிதாபச்சன், ராணா, பகத் பாசில் என பலரும் நடித்துள்ளனர். இயக்குனர் ஜெய்பீம் ஞானவேல்  என்பதால் இதில் கண்டிப்பாக ஒரு சமூக நீதி ஒளிந்திருக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.