1. Home
  2. கோலிவுட்

மிஷ்கினின் பைத்தியக்காரத்தனமான பேச்சு.. போரடிச்சு போச்சு என் மனைவி எனக்கு வேண்டாம்! கழுவி ஊத்தும் பயில்வான்

மிஷ்கினின் பைத்தியக்காரத்தனமான பேச்சு.. போரடிச்சு போச்சு என் மனைவி எனக்கு வேண்டாம்! கழுவி ஊத்தும் பயில்வான்

Bailwan About Mysin: மிஸ்கினை பொறுத்தவரை ஏதாவது தேவையில்லாத விஷயங்களை பேசி தானாகவே ஒரு பிரச்சினையில் மாட்டிக் கொள்வதை வழக்கமாக வைத்துக் கொள்வார். பொதுவாக சொல்வார்களே தான் சும்மா இருந்தாலும் வாய் சும்மா இருக்காது என்று. அது போல தான் இயக்குனர் மிஸ்கினும். எந்த நேரத்தில் என்ன பேசுவது என்று தெரியாமலேயே மனதில் பட்டதை பேசுகிறேன் என்ற நினைப்பில் பல இடங்களில் பைத்தியக்காரத்தனமாக பேசி இருக்கிறார்.

அதாவது மிஷ்கின் எப்போதுமே நான் தெளிவாகப் பேசுகிறேன் என்கின்ற ஒரு நினைப்பில் பேசிய அனைத்து விஷயங்கள் தவறாகத்தான் முடிந்திருக்கிறது. அந்த வகையில் தற்போது இவர் பேசிய ஒரு விஷயம் யாருமே சொல்ல முடியாத ஒரு விஷயத்தை சொல்லி இருக்கிறார். அதாவது என் மனைவி எனக்கு ரொம்பவே பிடிக்கும்.

நான் என்ன கேட்கிறனோ அதை அவள் கொடுப்பாள், அதே மாதிரி அவள் கேட்கும் அனைத்தையும் நான் கொடுப்பேன். ஏனென்றால் எங்களுக்குள் பத்து வருட காதல் இருக்கிறது. அந்த காதலின் அடையாளமாக தான் எங்களுக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். ஆனால் தற்போது என் மனைவியை விட என் மகள் தான் எனக்கு ரொம்ப முக்கியம்.

அதனால் தான் எனக்கும் என் மனைவிக்கும் கருத்து வேறுபாடு வந்தபோது கூட சட்ட ரீதியாக விவாகரத்து வாங்காமல் மனதாரராக பிரிந்து விட்டோம். எங்களுடைய பிரிவிற்கு காரணம் எனக்கு என் மனைவி போர் அடித்து விட்டது. ஒருவேளை நான் சினிமாவில் இல்லை என்றால் என் மனைவி கூட வாழ்ந்திருப்பேன். ஆனால் தற்பொழுது நான் இயக்குனராகவும், நடிகராகவும் பிரபலமாகிவிட்டதால் சினிமாவில் ஒரு நடிகையுடன் உறவில் இருந்து வருகிறேன்.

அதனால்தான் எனக்கு என் மனைவி வேண்டாம் என்று பிரிந்து விட்டேன் என கொஞ்சம் கூட கூச்ச நாச்சமே இல்லாமல் வாய்க்கு வந்தபடி உளறி இருக்கிறார். இவருக்கு ஏற்கனவே நடிகை பாவனா-வுடன் ஒரு தொடர்பு இருந்திருக்கிறது. அதன்பிறகு நடிகை ஆண்ட்ரியா உடனும் பல இடங்களில் கிசுகிசுக்கப்பட்டார். அப்படிப்பட்டவர் கொஞ்சம் கூட இப்பொழுது வரை திருந்தாமல் என்ன ஜென்மமாக இருக்கிறாரோ என்று இயக்குனர் மிஷ்கினை பற்றி பயில்வான் கழுவி கழுவி ஊத்தி இருக்கிறார்.

Cinemapettai Team
Vijay

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.