வித்தியாசமான படங்களை தொடர்ந்து இயக்கி வருபவர் இயக்குனர் மிஷ்கின். சமீபகாலமாக இவர் பல்வேறு பட விழாக்களில் கலந்து கொண்டு அநாகரிகமாக பேசி சர்ச்சையை ஏற்படுத்தி வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளது. இதற்கு சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் தக்க பதிலடி கொடுக்கும் விதமாக சில விஷயங்களை கூறியுள்ளார்.
அதாவது சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிய மிஷ்கின் அஞ்சாதே படத்திற்கு பிறகு ஏதாவது வெற்றி படத்தை கொடுத்துள்ளார். ஒரு முன்னணி இயக்குனர் என்பதால் மரியாதை நிமித்தமாக தங்களது பட விழாவில் இவரை அழைக்கிறார்கள். அந்த மேடையில் நாகரிகமாக பேச வேண்டும்.
அந்த இயக்குனரின் படத்தை முன்பு பார்க்கவே இல்லை என்பது போல நக்கலாக மிஷ்கின் பேசுகிறார். அதுவும் விஜய் ஆண்டனி எவ்வளவு பெரிய நடிகர். இப்போது தெலுங்கு சினிமாவில் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதிலும் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் படம் பெரிய அளவில் பேசப்பட்டது.
ஆனால் விஜய் ஆண்டனியின் பட விழாவில் கலந்து கொண்ட மிஷ்கின் அவரின் ஒரு படத்தை கூட பார்த்ததில்லை என்று பேசுகிறார். இது விஜய் ஆண்டனியை அவமானப்படுத்துவது போன்ற செயல். அதுமட்டுமின்றி ஒரு பட விழாவில் மிஷ்கின் அருகில் இயக்குனர் பாக்யராஜ் அமர்ந்திருந்தார்.
அந்த சமயத்தில் பாக்கியராஜ் மீது கால் படும்படி கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தார் மிஷ்கின். இதனால் பாக்கியராஜ் கொஞ்சம் தள்ளி தள்ளி உட்கார்ந்து. அவர் எத்தனை ஹிட் படங்கள் கொடுத்து உள்ளார். அதிலும் அவரது வயதுக்காவது மரியாதை கொடுக்க வேண்டும். மேலும் மிஷ்கின் பிசாசு 2 என்ற படத்தை எடுத்தார்.
பல வருடமாகியும் அந்த படம் வெளியாகாததற்கு காரணம் பிசாசு 2 படத்தை வாங்க யாரும் முன் வரவில்லை. ஏனென்றால் ஆடையின்றி நடித்தால் ரசிகர்கள் படம் பார்க்க வந்து விடுவார்கள் என்ற நினைப்பு மிஸ்கினிடம் இருந்தது. ஆனால் சமீபத்தில் இரவின் நிழல் படத்தில் இதேபோன்று பார்த்திபன் காட்சி வைத்திருந்தார்.
இரவின் நிழல் படம் ஓடாததால் தற்போது மிஸ்கினுக்கு பயம் வந்துள்ளது. இதனால் அண்டர் பல்டி அடித்து இது போன்ற காட்சி எனது படத்தில் இல்லவே இல்லை என்று சமாளிக்கிறார். இந்த பொழப்பு மிஷ்கினுக்கு தேவையா என மொத்தமாக வச்சி செய்து விட்டு உள்ளார் பயில்வான் ரங்கநாதன்.