1. Home
  2. கோலிவுட்

டி-ஷர்டில் கைவிட்ட மர்ம நபர்.. கேவலமான சம்பவத்தை வெளிப்படையாக சொன்ன நடிகை

டி-ஷர்டில் கைவிட்ட மர்ம நபர்.. கேவலமான சம்பவத்தை வெளிப்படையாக சொன்ன நடிகை

பொதுவாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பல பிரபலங்கள் கூறி வருகிறார்கள். இந்த சமூகத்தில் சில ஆண்கள் தவறாக பெண்களை அணுகும் முறை பல இடங்களில் நடந்து வருகிறது. குறிப்பாக பஸ் நிலையங்கள் மற்றும் பஸ்ஸில் சிலர் அத்துமீறுகிறார்கள்.

அவ்வாறு பஸ்ஸில் சென்ற போது நடந்த ஒரு விஷயத்தை பிரபல நடிகை ஒருவர் பேட்டியில் கூறியுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதாவது நடிகை மற்றும் பாடகியான அண்ட்ரியாவுக்கு தான் இந்த விஷயம் நடந்துள்ளது.

ஆண்ட்ரியா தற்போது வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகி வரும் அனல் மேலே பனித்துளி என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் மிஸ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 படத்தின் ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ஆண்ட்ரியா தனது 11 வயதில் நடந்த விஷயம் ஒன்றை கூறியுள்ளார். அதாவது தன்னுடைய வாழ்க்கையில் மொத்தமாக இரண்டு முறை தான் பஸ்ஸில் சென்றதாக கூறினார். அதில் முதல் முறை எனது தந்தையுடன் சென்றபோது டி ஷர்ட் இன் உள்ளே ஒரு ஆண் கைவிட்டார்.

உடனே பயந்து போய் இருக்கை முன் வந்து அமர்ந்து விட்டேன். அப்போது இந்த விஷயத்தை என் அப்பாவிடம் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் கூட எனக்கு வரவில்லை. அதேபோல் கல்லூரிக்கு ஒரு முறை பஸ்ஸில் செல்லும் போதும் இதே மாதிரி நடந்தது.

அன்றிலிருந்து பஸ்ஸிலேயே செல்லக்கூடாது என்ற முடிவை எடுத்ததாக ஆண்ட்ரியா கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார். இதை பார்த்த ஏழை மற்றும் நடுத்தர பெண்கள் தினமும் இந்த கொடுமையை அனுபவித்து வருவதாக பதிவிட்டுள்ளனர்.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.