எம்ஜிஆரின் கோபத்தைத் தூண்டிய நாகேஷ் .. தோட்டத்திற்கு வர சொல்லி என்ன செய்தார் தெரியுமா.?

தமிழ் சினிமாவையே ஆட்டிப் படைத்தவர்கள் எம்ஜிஆர் மற்றும் நாகேஷ். இவர்கள் இருவரும் பெரும்பாலான படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இவர்கள் சினிமாவைத் தாண்டி சொந்த வாழ்க்கை இல்லை நெருங்கிய நண்பர்களாகவே இருந்தனர்.

அப்போதைய காலகட்டத்தில் எம்ஜிஆர் நாகேஷ்காக பல உதவிகள் செய்துள்ளார். அதன் பிறகு சினிமாவில் படிப்படியாக முன்னேறிய நாகேஷ் தனக்கென ஒர் நிலையான இடத்தை பிடித்தார். மேலும் பல இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் நாகேஷின் கால்ஷூட் வாங்கிய பிறகுதான் ஹீரோக்களை தேர்வு செய்தனர்.

சினிமாவில் உள்ளவர்களுக்கு ஒரு கட்டத்திற்கு மேல் மார்க்கெட் இழக்க வாய்ப்புள்ளது. அதனால் நாகேஷும் சினிமாவை தாண்டி வேறு ஒரு தொழில் செய்யலாம் என யோசித்து பாண்டிபஜாரில் நாகேஷ் திரையரங்கம் என்ற தியேட்டரை கட்டினார்.

ஆனால் அந்த திரையரங்கம் ஒரு பள்ளிக்கு எதிரே உள்ளதால் பள்ளி மாணவர்களின் படிப்பை பாதிக்கும் என்பதால் பெரிய பொறுப்பில் உள்ளவர்கள் எம்ஜிஆரிடம் சென்று புகார் அளித்துள்ளனர். மேலும் எம்ஜிஆர் நாகேஷை தனது ராமாபுரம் தோட்டத்திற்கு அழைத்து பள்ளிக்கு எதிரே திரையரங்கு கட்டுவது மிகப் பெரிய தவறு என கோபத்துடன் கூறியுள்ளார்.

அதற்கு நாகேஷும் தவறுதான் நீங்கள் சொன்னால் உடனே இடித்து விடுகிறேன் என கூறியுள்ளார். மேலும் அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பள்ளிக்கு எதிரே உள்ள அதே தியேட்டருக்கு எப்படி வருவார்கள் என நாகேஷ் எதிர் கேள்வி கேட்டு எம்ஜிஆரை அசத்தியுள்ளார்.

அதன்பின்பு எம்ஜிஆர் அந்தத் தியேட்டருக்கு பல நிபந்தனைகள் உடன் திறக்க அனுமதி கொடுத்தார். ஆனால் நாகேஷ் கட்டிய திரையரங்கம் தற்போது கல்யாண மண்டபமாக செயல்பட்டு வருகிறது. மேலும் கடந்த 2018ஆம் ஆண்டு ஆரி நடிப்பில் வெளியான நாகேஷ் திரையரங்கம் படத்தின் தலைப்புக்கு எதிராக நாகேஷின் மகன் வழக்குப் போட்டார். ஆனால் அந்த வழக்கு தள்ளுபடி ஆனது.