நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி கடந்த சில தினங்களுக்கு முன்பு வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அது தொடர்பாக அரசிடம் விளக்கம் அளித்துள்ளதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது.
இந்நிலையில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் சட்ட சிக்கலில் சிக்காமல் இருப்பதற்காக சினிமா பிரபலம் பின்புறத்திலிருந்து காப்பாற்றுவதாகவும், இதில் அரங்கேறி இருக்கும் நாடக அரசியலை பற்றி புட்டு புட்டு வைத்திருக்கிறார் யூடியூபர் பிஸ்மி.
அதாவது இங்கே அரசியலைப் பொறுத்தவரை பிரபலங்களுக்கு ஒரு சட்டம், சாமானிய மக்களுக்கு ஒரு சட்டம் உண்டு. அதை வைத்துதான் பிரபலங்கள் சட்டத்தின் பிடியில் சிக்காமல் எஸ்கேப் ஆகி விடுகின்றனர். அதுமட்டுமின்றி DMK கட்சிக்கு சப்போர்ட்டாக பேசக்கூடிய இயக்குநர் கரு பழனியப்பன் போன்றோரும் இருக்கத்தான் செய்கின்றனர்.
மேலும் அரசியலிலும் சினிமாவிலும் பிரபலமாக இருக்கும் உதயநிதி ஸ்டாலின்-நயன்தாரா இருவரையும் பற்றி ஏற்கனவே கிசுகிசுக்கப்பட்டாலும், விக்னேஷ் சிவன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் இருவரும் சமீபத்தில் நடந்து முடிந்த செஸ் ஒலிம்பிக் போட்டி நிகழ்ச்சியின் மூலம் நண்பர்களானார்கள்.
ஏனென்றால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் இடம்பெற்ற பிரமாண்ட கலை நிகழ்ச்சி உள்ளிட்ட செயல்பாடுகளை இயக்குனர் விக்னேஷ் சிவன் தான் மேற்கொண்டார். அப்போது உதயநிதி மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் நெருங்கிய நண்பர்களாகி விட்டனர்.
ஆகையால் வாடகைத்தாய் பிரச்சினையில் சிக்கிய நயன்-விக்கி இருவரையும் விசாரணை என்ற பெயரில் மக்களை ஏமாற்றி வருகின்றனர். மேலும் இந்த பிரச்சனையில் விக்னேஷ் சிவன் தப்பே செய்திருந்தாலும் அவரை ஒன்றும் செய்யப்போவதில்லை என்று பிஸ்மி சொல்கிறார்.
மேலும் நயன்-விக்கி தரப்பில் கடந்த டிசம்பர் மாதமே வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறும் ஒப்பந்தம் பதிவு செய்ததாக விசாரணைக் குழுவிடம் விக்னேஷ் நயன்தாரா தம்பதி ஆதாரங்களை சமர்ப்பித்தது சொல்லப்படுகிறது. மேலும் 6 வருடங்களுக்கு முன்பே பதிவு திருமணம் செய்திருக்கும் ஆதாரத்தையும் காட்டினர். ஆனால் அதெல்லாம் உண்மையானதுதானா என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம்.