1. Home
  2. கோலிவுட்

பிரபாஸுடன் சேர்ந்து வசமாக சிக்கிய நயன்தாரா.. இருக்க பிரச்சனை போதாதுன்னு சர்ச்சையில் சிக்கும் படம்

பிரபாஸுடன் சேர்ந்து வசமாக சிக்கிய நயன்தாரா.. இருக்க பிரச்சனை போதாதுன்னு சர்ச்சையில் சிக்கும் படம்
தேவையில்லாமல் பிரபாஸ் உடன் இணைந்து நயன்தாராவும் பிரச்சினையில் மாட்டிக் கொண்டார்.

Nayanthara: சமீப காலமாகவே வரலாற்று சிறப்பு அம்சம் கொண்ட படங்களுக்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் முன்னணி தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் அது மாதிரியான படங்களை எடுப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

ஆனால் இதில் இருக்கக்கூடிய சிக்கல் என்னவென்றால் ரசிகர்கள் புராணக் கதைகளை எப்படி படித்தார்களோ, அதே போன்று திரையில் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். அப்படி மட்டும் இல்லை என்றால் அந்த படம் பெரும் சர்ச்சையாகி விடுகிறது. அதிலும் சமீபத்தில் வெளியான ஆதி புருஷ், பொன்னியின் செல்வன் போன்ற படங்களுக்கு எல்லாம் ரசிகர்கள் ஏகப்பட்ட நெகட்டிவ் கமெண்ட்களை குவித்தனர்.

இப்போது மறுபடியும் சிவன்- பார்வதியை மையமாகக் கொண்டு உருவாகும் படத்தில் பிரபாஸ் மற்றும் நயன்தாரா இருவரும் ஜோடியாக நடிக்க போகின்றனர். ஆந்திரா நடிகர் மோகன் பாபுவின் மகன் விஷ்ணு ஒரு படம் இயக்குவதாக இருக்கிறது.

இந்த படத்தின் பெயர் கண்ணப்பர், இது சிவன் சம்பந்தப்பட்ட கதை. இப்பொழுது எல்லா படமும் பான் இந்தியா படமாக இருப்பதால் இந்த படமும் அது மாதிரி எடுக்கப்படுகிறது. இந்த படத்தில் சிவனாக நடிக்க போகிறவர்கள் பிரபாஸ், மோகன்லால், சிவராஜ்குமார் போன்ற மூன்று பேரையும் தேர்வு செய்துள்ளனர்.

இதில் இவர்கள் மூன்று பேரும் நடக்கப் போகிறார்களா, இல்லை இதில் யார் ஒருவர் நடிக்க போகிறார் என்று தெரியவில்லை. இதில் பார்வதிக்கு நயன்தாராவை முடிவு செய்துள்ளனர். இவரும் கண்டிப்பாக நடிப்பார் என்று தெரிகிறது. ஏற்கனவே ஆந்திராவில் சீதாவாக நடித்து புகழ்பெற்றார்.

அதிலிருந்து தான் நயன்தாராவின் சினிமா வாழ்க்கை பெரிய அளவில் வளர்ச்சி பெற்றது. அதனால் இந்த கதாபாத்திரத்தை மறுக்காமல் ஏற்றுக்கொள்வார். ஏற்கனவே கடவுள் வேடம் அணிந்து பல சர்ச்சைகளில் சிக்கி அசிங்கப்பட்டார் நயன்தாரா. அப்படி இருக்கும் போது இந்த படத்திலும் அது தொடருமா என கேள்வி எழுகிறது.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.