நயன்தாராவின் திடீர் மாற்றத்திற்கு தமன்னா காரணமா.? எல்லாம் மூக்குத்தி அம்மனுக்கே வெளிச்சம்

Nayanthara: இது என்னப்பா உலக அதிசயமா இருக்கு. இப்படி ஒரு சம்பவம் நடக்க வாய்ப்பே இல்லையே என ஆச்சரியமாக பேசி வருகின்றனர் விஷயம் தெரிந்தவர்கள்.

அப்படி என்ன நடந்தது என்று விசாரித்தால் நயன்தாராவை பற்றிய செய்தி வந்து விழுகிறது. திருமணத்திற்கு பிறகு அதிக சர்ச்சைகளில் சிக்குவதே இவருக்கு வாடிக்கையாகி விட்டது.

இது ஜாலியா இருக்கே என அவரே சில பிரச்சனைகளை ஊதி பெரிதாக்கி விடுகிறார். அப்படித்தான் சமீபத்தில் மூக்குத்தி அம்மன் 2 பூஜைக்கு வந்து ஆச்சரியப்படுத்தினார்.

நயன்தாராவின் திடீர் மாற்றத்திற்கு தமன்னா காரணமா.?

இவங்க இப்படி எல்லாம் வர மாட்டாங்களே என்ன ஆச்சு என சோசியல் மீடியாவே ஆச்சரியப்பட்டு போனது. ஆனால் அங்கும் தன்னுடைய கெத்தை காட்டி ஒரு சலசலப்பை உருவாக்கினார்.

அதை அடுத்து படப்பிடிப்பு தளத்தில் உதவி இயக்குனரோடு சண்டை போட்டதாக செய்திகள் வந்தது. ஆனால் அதற்கு படகுழு மறுப்பு தெரிவித்து இருந்தாலும் விஷயம் அறிந்தவர்கள் அது உண்மைதான் என்கின்றனர்.

இந்த சூழலில் நயன்தாரா அப்படியே பெட்டி பாம்பாக அடங்கி விட்டாராம். ஷூட்டிங் ஸ்பாட்டில் அவருடைய திடீர் மாற்றத்தை பார்த்து அங்கு இருப்பவர்களே வாயடைத்து போயிருக்கின்றனர்.

என்னவென்றால் தன்னுடைய காட்சிகள் முடிந்தும் கூட அவர் அங்கேயே அமர்ந்து அனைவருடனும் கலகலப்பாக பேசுகிறாராம். பிரேக் டைமில் தான் கேரவனுக்கு செல்கிறார் என்கின்றனர்.

ஒருவேளை சுந்தர் சி இவரை தூக்கி விட்டு தமன்னாவை நடிக்க வைத்து விடுவாரோ என்ற பதட்டமாக கூட இருக்கலாம். அதனால் தான் இப்போது அவர் அடக்கி வாசிக்கிறார் என கோடம்பாக்கத்தில் சத்தம் இல்லாமல் பேசி வருகின்றனர்.