1. Home
  2. கோலிவுட்

வருங்கால குழந்தைக்காக பயிற்சி எடுக்கும் நயன்தாரா, விக்னேஷ் சிவன்.. வைரலாகும் பதிவு

வருங்கால குழந்தைக்காக பயிற்சி எடுக்கும் நயன்தாரா, விக்னேஷ் சிவன்.. வைரலாகும் பதிவு

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது ஒரு பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் தனது பல வருட காதலன் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் திருமணம் முடிந்த சிறிது நாட்களிலேயே வெளிநாட்டுக்கு ஹனிமூன் சென்றனர்.

இவர்கள் காதலிக்கும் போது அடிக்கடி வெளிநாட்டு செல்வதை வழக்கமாக வைத்திருந்த நிலையில் தற்போதும் அடிக்கடி சென்று வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை குடும்பத்துடன் துபாயில் கொண்டாடியுள்ளனர்.

அதாவது கப்பலில் சென்றபடியே விக்னேஷ் சிவன் கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இந்நிலையில் நயன்தாரா எந்த சமூக வலைத்தள பக்கத்திலும் இல்லை. இதனால் விக்னேஷ் சிவன் தான் நயன்தாராவின் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இப்போது விக்னேஷ் சிவன் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் இது என்னுடைய எட்டாவது பிறந்தநாள், எனக்கு ரொம்ப ஸ்பெஷல் என்று கூறியிருந்தார். அதாவது நயன்தாராவுடன் சேர்ந்து எட்டாவது முறையாக பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

மேலும் தொடர்ந்து சில புகைப்படங்களை வெளியிட்டு வந்த விக்னேஷ் சிவன் குழந்தைகளுடன் நயன்தாரா இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். அதில் இது குழந்தைகளுக்கான நேரம், எதிர்காலத்திற்காக பயிற்சி எடுக்கிறோம் என குறிப்பிட்டு இருந்தார். இந்த பதிவு தற்போது வைரலாக பரவி வருகிறது.

வருங்கால குழந்தைக்காக பயிற்சி எடுக்கும் நயன்தாரா, விக்னேஷ் சிவன்.. வைரலாகும் பதிவு
Nayanthara-vignesh shivan

ஏனென்றால் இதைப் பார்த்த ரசிகர்கள் நயன்தாரா கர்ப்பமாக இருக்கிறாரா என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர். ஆனால் தற்போது நயன்தாரா கோலிவுட், பாலிவுட் என தனது பட வேலைகளில் பிஸியாக உள்ளார். இந்நிலையில் சாதாரணமாக விக்னேஷ் சிவன் சொன்னது .

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.