1. Home
  2. கோலிவுட்

நடிப்பை ஓரங்கட்டி பிசினஸில் குதித்த நயன்தாரா.. கோடிக்கணக்கில் லாபம் பார்க்க எடுத்த அஸ்திரம்

நடிப்பை ஓரங்கட்டி பிசினஸில் குதித்த நயன்தாரா.. கோடிக்கணக்கில் லாபம் பார்க்க எடுத்த அஸ்திரம்
நடிப்பை எல்லாம் ஓரங்கட்டும் அளவுக்கு அவர் பிசினஸிலும் கலக்கிக் கொண்டிருப்பது பலருக்கும் ஆச்சர்யம் தான்.

லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டு மாஸ் காட்டும் நயன்தாரா இப்போது அதிரடியான பல விஷயங்களில் இறங்கி இருக்கிறார். ஹீரோக்களுக்கு இணையான கேரக்டர், சம்பளம் என டாப் ஹீரோயின்களை எல்லாம் ஓரம் கட்டி வரும் இவர் இப்போது பாலிவுட்டிலும் தடம் பதிக்க இருக்கிறார்.

ஷாருக்கானுக்கு ஜோடியாக இவர் நடித்துள்ள ஜவான் விரைவில் வெளிவர இருக்கிறது. மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படத்தின் மூலம் நயன்தாரா பல திட்டங்களையும் போட்டிருக்கிறார். இது ஒரு புறம் இருந்தாலும் நடிப்பை எல்லாம் ஓரங்கட்டும் அளவுக்கு அவர் பிசினஸிலும் கலக்கிக் கொண்டிருப்பது பலருக்கும் ஆச்சர்யம் தான்.

அந்த வகையில் ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை திறம்பட நடத்திக் கொண்டிருக்கும் இவர் அதன் மூலம் கல்லா கட்டி வருகிறார். அது மட்டுமின்றி அவர் சமீபத்தில் தன் தோழியுடன் இணைந்து லிப் பாம் பிசினஸ் ஒன்றை ஆரம்பித்திருந்தார். அதை இப்போது நல்ல வரவேற்பை பெற்று லாபகரமாகவும் சென்று கொண்டிருக்கிறது.

இப்படி ஜெயத்தே தீருவேன் என்ற சபதத்தோடு பிசினஸில் குதித்துள்ள நயன்தாரா புது அவதாரம் ஒன்றையும் தற்போது எடுத்துள்ளார். அதாவது அவர் தியேட்டர் அதிபராகவும் மாறி இருக்கிறார். அந்த வகையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையின் அருகில் இருக்கும் புகழ்பெற்ற அகஸ்தியா தியேட்டரை தான் அவர் வாங்கி இருக்கிறார்.

அதை இப்போது நவீன முறையில் மாற்றி அமைக்கும் பணியில் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அந்த வரிசையில் பல்வேறு வசதிகளை கொண்டு உருவாகி வரும் அந்த திரையரங்கம் அடுத்த வருடம் கோலாகலமாக திறக்கப்பட இருக்கிறது. இந்த புது பிசினஸை நயன்தாரா தன் நண்பர்களுடன் இணைந்து நடத்த இருக்கிறார்.

இதன் மூலம் அவர் பல கோடிக்கு லாபம் பார்க்கவும் திட்டமிட்டு இருக்கிறார். தற்போது புதுப்புது நடிகைகளின் வரவால் டாப் ஹீரோயின்களின் மார்க்கெட் ஏறி இறங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அப்படி மார்க்கெட் குறையும் பட்சத்தில் நடிப்பை ஓரம் கட்டி முழுவதுமாக சொந்த தொழிலில் ஈடுபடவும் அவர் முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Cinemapettai Team
Vijay

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.