Nayanthara: அதிகமான சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதலிடத்தில் இருப்பது நயன்தாரா. அப்படிப்பட்ட இவர் திருமணத்திற்கு பிறகும் ஹீரோயினாக தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் டிசம்பர் 1ஆம் தேதி வெளிவந்த 75 ஆவது படம் தான் அன்னபூரணி. இப்படத்தை நிலேஷ் கிருஷ்ணா என்கிற அறிமுக இயக்குனர் இயக்கி இருக்கிறார்.
மேலும் இப்படத்தில் சத்யராஜ், ஜெய், ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். நயன்தாரா படம் என்றாலே அதிக எதிர்பார்ப்பை வைத்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருப்பார்கள். அந்த வகையில் இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை. அதற்கு காரணம் படம் வெளிவந்த இரு தினங்களுக்குப் பின் புயலுடன் கூடிய கனத்த மழை பெய்ததால் சென்னை மக்கள் முழுவதும் பாதிப்படைந்து விட்டார்கள்.
இதனால் சென்னையில் உள்ள திரையரங்குகள் இயங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. இந்த காரணத்திற்காக அப்பொழுது வெளியான நயன்தாராவின் அன்னபூரணி மற்றும் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த பார்க்கிங் படம் வசூல் ரீதியாக அடிப்பட்டு விட்டது. இதனை அடுத்து பழைய நிலைமைக்கு திரும்பியதும் தியேட்டர்களில் இவர்கள் படம் பெருசாக எடுபடவில்லை.
அதற்கு காரணம் அந்த நேரத்தில் வெளிவந்த புது படத்தின் வரவு தான். அதிலும் நயன்தாராவுக்கு போட்டியாக காமெடி நடிகர் சதீஷ் படம் மோதி வெற்றி பெறும் என்று யாரும் எதிர்பார்த்து இருக்கவே மாட்டார்கள். அந்த அளவிற்கு சதீஷ் நடிப்பில் வெளிவந்த கஞ்சூரின் கண்ணப்பன் படம் மக்களிடம் ரீச் ஆகிவிட்டது. அறிமுக இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் சதீஷ், ரெஜினா, நாசர், ரெடின் கிங்ஸ்லி நடிப்பில் வெளிவந்த மூன்று நாட்களிலேயே 4 கோடி வசூலை பெற்று விட்டது.
இதனால் அன்னபூரணி படம் வெளிவந்து பத்து நாட்கள் தாண்டிய நிலையிலும் இப்பொழுதுதான் தட்டு தடுமாறி 6கோடி வசூலை தொட்டிருக்கிறது. இதற்கிடையில் நயன்தாரா எப்படியாவது இந்த படத்தின் வசூலை அதிகரிக்க வேண்டும் என்று அவரே பேட்டிகளில் பிரமோஷன் செய்யும் விதமாக பேசியிருந்தார். இவரை பொறுத்தவரை இதுவரை நடித்த படங்களில் எந்த படத்திற்குமே பிரமோஷனுக்கு வந்ததே இல்லை.
அப்படிப்பட்ட இவர் இந்த படத்திற்கு மட்டும் தானாக வந்து ப்ரமோஷன் செய்தும் பிரயோஜனம் இல்லாமல் போய்விட்டது. இவரிடம் எத்தனை தயாரிப்பாளர்கள் கெஞ்சியும் அவர்களுக்கு இறங்கி வராத நயன்தாரா இப்பொழுது தானாகவே வந்து செய்தும் கை கொடுக்கவில்லை என்றால் இவர் செய்த கர்மா இவரை திருப்பி அடிக்கும் விதமாக அமைந்துவிட்டது.