10 வயது வித்தியாசமுள்ள நடிகருடன் கூட்டணி போடும் நயன்தாரா.. விக்கியை தூக்கிவிட வேற வழியே இல்ல!

விக்னேஷ் சிவனை ஏகே 62 படத்தில் இருந்து அதிரடியாக அஜித் தூக்கி எறிந்த பிறகு என்ன செய்வதென்று மூலையில் முடங்கி போனார். அதனால் அவரை எப்படியாவது தூக்கி விட வேண்டும் என்று வேறு வழி இல்லாமல் நயன்தாரா 10 வயது வித்தியாசம் உள்ள நடிகருக்கு ஜோடியாக நடிக்க தயாராகி விட்டார்.

நயன்தாரா எடுக்கும் வெறித்தனமான முயற்சிக்காகயாவது எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்று விக்னேஷ் சிவனும் களத்தில் இறங்கிவிட்டார். இதற்காக யோசித்து தற்போது ஒரு கதையினை தேர்ந்தெடுத்து அதில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்க, படத்தை இயக்குகிறார்.

இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நயன்தாரா முக்கிய கேரக்டரில் நடிக்க முடிவாகியுள்ளது. மேலும் படத்திற்கு கூடுதல் வலு சேர்க்கும் விதமாக இசையமைப்பாளர் அனிருத் படத்திற்கு இசையமைக்கிறார்.

படத்தை உலக நாயகன் கமலஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் 45 கோடி பொருட்செலவில் தயாரிக்க உள்ளார். பிரதிப் ரங்கநாதனுக்கு இவ்ளோ பெரிய பட்ஜெட் மற்றும் நயன்தாரா ஜோடி என்றதும் படம் வேறுவிதமான பரபரப்பு ஏற்படுத்துகிறது.

இந்த படத்தின் தலைப்பு எல்ஐசி என முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. எப்படியாவது இந்த படத்தை வெற்றி படமாக்கி விக்னேஷ் சிவன் தலைநிமிர வேண்டும் என்று நயன்தாரா விரும்புகிறார். கூடிய விரைவில் இந்த படத்தின் அறிவிப்பு வெளிவரும்.

மேலும் அஜித் தன்னை தூக்கி எறிந்ததை இப்போது வரை ஜீரணிக்க முடியாமல் இருக்கும் விக்னேஷ் சிவன், நிச்சயம் இந்த படத்தின் மூலம் அவருக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்று வெறித்தனத்தில் இருக்கிறாராம். இதனால் ஏகே 62 படம் ரிலீஸ் ஆகும் அதே தினத்தில் தான் இந்த படத்தையும் ரிலீஸ் செய்யும் முடிவில் இருக்கிறார்.